நான்கு இடங்களில் அதிகரிக்கும் மின்னியல் சாலைக் கட்டணம்

நான்கு இடங்களில் அதிகரிக்கும் மின்னியல் சாலைக் கட்டணம்

1 mins read
6b72732c-3300-4169-b81e-5da569a93f23
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நான்கு பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டண முறை ஒரு வெள்ளி அதிகரிக்கவுள்ளது.

போக்குவரத்து அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மையப் பகுதியை நோக்கிச் செல்லும் அயர்-ராஜா விரைவுச்சாலையில் ஜூரோங் டவுன்ஹாலுக்குப் பிறகு உள்ள பகுதி, தெற்கை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையின் பிராடல் சாலைக்குப் பிறகு வரும் பகுதி மற்றும் தெற்கை நோக்கிய மத்திய விரைவுச்சாலையுடன் இணையும் தீவு விரைவுச்சாலைப் பகுதி, டேஃபு பாலத்தைத் தாண்டிய காலாங்-பயா லேபார் விரைவுச்சாலையின் பகுதி உள்ளிட்டவற்றில் இருக்கும் நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டணம் அதிகரிக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.