வேலையிடங்களில் மரணம் நிகழ்வதைத் தவிர்க்க நிறுவனங்களும் ஊழியர்களும் தங்களின் பங்கை ஆற்றவேண்டும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வலியுறுத்தியுள்ளார்.
"நமது ஊழியர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வீடு திரும்ப வேலையிடப் பாதுகாப்பைப் பொருத்தவரை நாம் மீண்டும் சிறந்து விளங்கவேண்டும் என்பதே நான் அனைவருக்கும் வலியுறுத்துவது," என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் புதன்கிழமையன்று (27 ஜூலை) நடைபெற்ற வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது நிகழ்ச்சியில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 37 வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன.
"இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்கள் நம் அனைவருக்கும் சவாலாக இருந்துள்ளன. மேலும், இந்த மரணங்களை எளிதில் தவிர்த்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது," என்று டாக்டர் டான் சுட்டினார்.

