உக்ரேனில் உதவிய இரு சிங்கப்பூரர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதுக்கு முன்மொழியப்பட்ட முதல் நபர்கள்

உக்ரேனில் உதவிய இரு சிங்கப்பூரர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதுக்கு முன்மொழியப்பட்ட முதல் நபர்கள்

1 mins read
810e4122-8581-468c-8e60-c608d51fce1a
திரு பிரவீன் சூரஜ் சாந்தகுமார் (இடது), திரு சரன்ஜித் சிங் வாலியா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காணொளியில் இடம்பெறும் ஒரு காட்சி -

போலந்துக்குச் சென்று அங்குள்ள உக்ரேனிய அகதிகளுக்கு உதவிய இருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 'ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர்' விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.

பிரவீன் சூரஜ் சாந்தகுமார், போலந்தில் வசித்துவரும் சிங்கப்பூரரான சரன்ஜித் சிங் வாலியா ஆகிய இருவரும் இவ்வாண்டின் விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ள முதல் நபர்கள்.

இவர்கள் ஓர் இணையாக முன்மொழியப்பட்டுள்ளனர்.

எட்டாவது ஆண்டாக வழங்கப்படும் 'சிங்கப்போரியன் ஆஃப் தி இயர்' எனப்படும் இந்த விருது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

திரு பிரவீன், திரு சரன்ஜித் இருவரும் ரஷ்ய படையெடுப்பால் போலந்துக்குச் சென்ற உக்ரேனிய அகதிகளுக்கு உணவு வழங்கி உதவிக்கரம் நீடடினர்.