சிங்கப்பூரில் 11வது குரங்கம்மை தொற்றுச் சம்பவம்

சிங்கப்பூரில் 11வது குரங்கம்மை தொற்றுச் சம்பவம்

1 mins read
7f09d5a7-ed71-4902-b82c-748e87e9fe87
தேசிய தொற்றுநோய் நிலையம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் 11வது குரங்கம்மை தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆடவர் ஒரு 32 வயது சிங்கப்பூரர்.

அவர் தற்போது தேசிய தொற்றுநோய் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது.

ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அவரின் கால்களுக்கு நடுவே உள்ள பகுதியில் அரிப்பு தென்பட்டது.

அரிப்பு பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

செவ்வாய்க்கிழமையன்று (26 ஜூலை) அந்த ஆடவர் மருத்துவ உதவியை நாடினார்.

அன்றே அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.