ஜிஎஸ்கே எனப்படும் கிளாக்ஸோஸ்மித்கிளைன் மருந்து நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஓர் ஊழியர் அதன் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
ஊட்டச்சத்து, செரிமானம் தொடர்பில் உலகளாவிய வல்லுநரான கள்ளிவளப் பிரவீன் நாயர் ஜிஎஸ்கே நிறுவனத்தில் சேர 2018ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.
ஈராண்டுகளுக்குப் பிறகு அவர் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்.
தன்னிடம் இருக்கக்கூடிய மற்ற வேலைகளைத் தனக்கு வழங்க ஜிஎஸ்கே கருத்தில்கொள்ளவில்லை என்று கூறும் திரு பிரவீன், சுமார் 1.35 மில்லியன் வெள்ளிக்கு அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதியலிருந்து தான் வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரு பிரவீனை 'ராஜா அண்ட் டான்' நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு விக்ரம் நாயர் பிரதிநிதிக்கிறார்.

