கிராஞ்சி விரைவுச்சாலையுடன் மேற்கு நகரங்களை இணைக்கும் திட்டம்

கிராஞ்சி விரைவுச்சாலையுடன் மேற்கு நகரங்களை இணைக்கும் திட்டம்

1 mins read
465734ef-f7dc-489d-8334-32c8f5e469c3
செஞ்சா வட்டாரத்தை கிராஞ்சி விரைவுச்சாலையுடன் இணைக்கும் மேம்பாலம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் மேற்குப் பகுதியில் உள்ள துணை நக­ரங்­கள் இரண்டை கிராஞ்சி விரை­வுச்­சாலை­யு­டன் இணைக்­கும் மாபெ­ரும் திட்­டம் குறித்து நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. அதன் தொடர்­பாக இரண்டு மேம்­பா­லங்­கள் விரை­வில் தொடங்­கப்­ப­ட­வுள்­ளது. அத­னால் புக்­கிட் பாஞ்­சாங் குடி­யி­ருப்­பு­வா­சி­கள் எளி­தில் கிராஞ்சி விரை­வுச்­சா­லை­யைப் பயன்­ப­டுத்த முடி­யும்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இத­னைத் தெரி­வித்­துள்­ளது.

செஞ்சா ரோடு மற்­றும் கிராஞ்சி விரை­வுச்­சா­லையை இணைக்­கும் மேம்­பா­லங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வு­பெ­றும் நிலை­யில் உள்­ள­தாக ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக கிராஞ்சி விரை­வுச்­சாலை, உட்­லண்ட்ஸை நோக்­கிச் செல்­லும் புதிய மேம்­பா­லத்­தின் ஒரு பகுதி கடந்த ஜன­வ­ரி­யில் திறக்­கப்­பட்­டது.

இந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் இந்­தத் திட்­டம் முழு­மை­யாக நிறை­வு­பெற்று திறக்­கப்­ப­டும்­போது செஞ்சா ரோடு மற்­றும் புக்­கிட் பாஞ்­சாங் வட்­டார வாக­ன­மோட்­டி­கள் பயன்­பெ­று­வர். அவர்­க­ளால் கிராஞ்சி விரை­வுச்­சா­லைக்கு நேர­டி­யா­கச் செல்ல முடி­யும்.

அத்­து­டன், மேற்­கில் தெங்கா என்ற புதிய துணை நக­ரம் உரு­வா­கும். சுவா சூ காங், ஜூரோங், புக்­கிட் பாத்­தோக் ஆகிய நக­ரங்­க­ளால் சூழப்­பட்ட புதிய நக­ர­மா­கும். அது 700 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் உள்ள பீஷா­னின் அள­வா­கும். வரும் 2025ஆம் ஆண்­டுக்­குப் பின் அந்­ந­க­ரம் முழு­மை­யான வளர்ச்­சியை எட்­டும்.

அப்­போது அங்கு ஏறக்­கு­றைய 42,000 வீடு­கள் உரு­வா­கும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.