ஹீலிங் த டிவைட் அமைப்பினர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

'ஹீலிங் த டிவைட்' என்ற தடுப்­பூசிக்கு எதி­ரான அமைப்­பின் நிறு­வ­னர் திரு­வாட்டி ஐரிஸ் கோ மீது நேற்று மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

மேலும் மருத்­து­வர் ஒரு­வர் மற்­றும் முன்­னாள் உத­வி­யா­ளர் ஒரு­வர் மீதும் கொவிட்-19 தடுப்­பூசி குறித்த பொய்­யான தக­வல்­களை வழங்­கி­ய­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

பொது மருத்­து­வர் ஜிப்­சன் குவா, 34, கேரி தோ கோங் சூங் ஆகி­யோ­ரு­டன் இணைந்து கூட்­டாக இந்­தக் குற்­றத்தை கடந்த அக்­டோ­பர் மாதம் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மருத்­து­வ­ரான ஜிப்­சன், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­காக தடுப்­பூசி ஆவ­ணங்­களில் போலி­யான தக­வல்­களை இடம்­பெ­றச் செய்து இருக்கிறார் என்றும் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தடுப்­பூசி போடாத ஒரு­வ­ருக்கு தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் வாங்­கித் தரும் முயற்­சி­யில் ஈடு­பட்ட இவர்­கள் கேரி தோ என்­ப­வர் சினோ­ஃபார்ம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக பொய்யான தகவல் அளித்து தடுப்பூசிச் சான்றிதழ் பெற முயன்றனர்.

மருத்­து­வர் குவா­வு­ட­னும் அவ­ரு­டைய உத­வி­யா­ளர் தாமஸ் சுவா செங் சூன் என்­ப­வ­ரு­ட­னும் சேர்ந்து கோ என்­ப­வர், சுகா­தார அமைச்­சுக்கு தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக ஜன­வரி 14ஆம் தேதி தவ­றான தக­வலை அளித்­த­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது. அதே­போல் லிம் ஜுங்கி என்­ப­வ­ரும் இதே போன்ற குற்­றத்தைப் புரிந்­துள்­ளார்.

கோ மீது ஏற்­கெ­னவே கொவிட்-19 தடுப்­பூசி குறித்த தவ­றான தக­வலை சுகா­தார அமைச்சுக்கு அளித்­த­தாக இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யி­ருந்­தன.

நேற்று நடந்த நீதி­மன்ற விசா­ர­ணை­யில் குவா மீது மொத்­தம் 9 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இதில் தொடர்­புள்ள ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த 43 வயது நியூட்­டன் என்­ப­வர் மீதான வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது.

நியூட்­டன், குமாரி பக்­லர், திரு சோசன், குமாரி வோங்­லங்கா அபின்யா, குமாரி நட்­டா­லியா கார்­மெல்லா சேசன் ஆகி­யோ­ருக்கு தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் பெற்­றுத்­தரவே அவர்­கள் இவ்­வாறு பொய்­யான தக­வல்­களை அளித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!