சிங்கப்பூரில் 11ஆவது குரங்கம்மை தொற்று உறுதி

சிங்கப்பூரில் 11ஆவது குரங்கம்மை தொற்று உறுதி

1 mins read
4d6bef13-e7d2-4357-bd50-2b912023dd87
-

சிங்கப்பூரில் நேற்று மேலும் ஒரு சிங்கப்பூரருக்கு குரங்கம்மை தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த 32 வயது ஆடவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் அவர் தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என சுகாதார அமைச்சு நேற்று தனது இணையத்தளத்தில் தெரிவித்தது. ஆடவரின் உடல்நிலை சீராக உள்ளது.

அவருக்கு ஜூலை 12ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கவட்டியில் (இடுப்பு மற்றும் தொடைக்கு இடைப்பட்ட பகுதி) தடிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து அதே நாள் அவர் தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

இதுவரை சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட 11 குரங்கம்மை தொற்று உடையவர்களில் 11 பேர் சிங்கப்பூரர்கள், ஐந்து பேர் இங்கு வந்த வெளிநாட்டவர்.