புதுப்பிப்புப் பணி ஒப்பந்ததாரர்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்கள் அதன் எண்ணிக்கை 28 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.
ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை 807 புகார்கள் பதிவாகி உள்ளதாக சிங்கப்பூர்
பயனீட்டாளர் சங்கம் தெரிவித்
துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக 627 புகார்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன.
புதுப்பிப்புப் பணி ஒப்பந்தத்
தாரர்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டில் 1,300 புகார்கள் பதி
வாகின. ஒப்பந்ததாரர்கள் மீது 2020ஆம் ஆண்டில் 869 புகார்கள் பதிவாகின.
பதிவான புகார்களில் பெரும்பாலானவை நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் புதுப்பிப்புப் பணிகளை முடிக்காதது, திருப்திகரமற்ற பணிகள் ஆகியவற்றுடன்
தொடர்புடையவை.
கடந்த ஆறு மாதங்களில்
வீட்டுப் புதுப்பிப்புப் பணிகள் துறை மீது ஆக அதிகமான புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, மின்சார, மின்னணுவியல், அழகு, மோட்டார் வாகனம் ஆகிய துறைகள் மீதும் அதிகமான புகார்கள் பதிவாகி உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இத்துறைகளுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள புகார்கள் இவ்வாண்டு அதிகரித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் மொத்தம் 7,960 புகார்கள் பதிவாகின.
கடந்த ஆண்டு பதிவான புகார்களைவிட இது 9 விழுக்காடு அதிகம்.
கொவிட்-19 தொடர்பான
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளும் பயனீட்டாளர் பரிவர்த்தனைகளும் அதிகரித்திருப்பதால் புகார்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.
"பயனீட்டாளர்களுக்கு எதிரான நியாயமற்ற நடைமுறைகளைக் கண்டுபிடிக்க சங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும், இதற்கிடையே, சிங்கப்பூரில்
பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டங்களை மேலும் வலுப்படுத்த அதிகாரிகளுடன் சங்கம் ஒன்றிணைந்து செயல்படும்," என்று திரு யோங் தெரிவித்தார்.