டெங்கி பாதிப்பு அதிகரித்துள்ளதால் 800,000 மாணவர்களுக்கு கொசு விரட்டிகள்

டெங்கி பாதிப்பு அதிகரித்துள்ளதால் 800,000 மாணவர்களுக்கு கொசு விரட்டிகள்

2 mins read
5709e48f-d763-444b-9baf-05ca22432c37
பெய் டோங் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கொசு விரட்டிகளை வழங்கிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில் பாலர் பள்­ளி­கள், தொடக்­கப்­பள்­ளி­கள், உயர்­நி­லைப்­பள்­ளி­கள் ஆகி­ய­வற்­றில் பயி­லும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் கொசு விரட்­டி­களை வழங்க இருக்­கின்­றன.

இவ்­வாண்­டில் இது­வரை ஏறத்­தாழ 22,000 பேர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஆண்டு டெங்­கி­யால் மொத்­தம் 5,258 பேர் மட்­டுமே பாதிப்­ப­டைந்­த­னர். இந்­தத் தக­வலை தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் தெமா­செக் அற­நி­று­வனமும் இணைந்து நேற்று வெளி­யிட்­டன. டெங்­கிக்கு எதி­ராக மாண­வர்­கள், பெற்­றோர், பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோர் இணைந்து உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சின் மூத்த நாடாளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் அழைப்பு விடுத்­துள்­ளார். தீவெங்­கும் உள்ள ஏறத்­தாழ 800,000 மாண­வர்­க­ளுக்கு 30 மில்லி ­லிட்­டர் கொசு விரட்­டியை வழங்­கும் திட்­டத்தை அவர் நேற்று தொடங்­கி­வைத்­தார்.

ஒவ்­வொரு போத்­த­லு­டன் டெங்­கிக்கு எதி­ரான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் துண்டுப் பிர­சு­ரம் இருக்­கும். சமூ­கப் பரா­ம­ரிப்பு அமைப்பு­க­ளின் சேவை­யைப் பெறு­ப­வர்­கள் தங்­கள் இல்­லத்­துக்கு அரு­கில் உள்ள சமுக சேவை அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து கொசு விரட்­டி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

கொசு இனப்­பெ­ருக்­கத்­தைத் தடுக்க என்­னென்ன செய்ய வேண்­டும் என்­பது குறித்து மாண­வர்­

க­ளுக்­குப் பள்­ளி­கள் கற்­பித்­துள்­ளன. டெங்­கி­யால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள வட்­டா­ரங்­களில் உள்ள பள்­ளி­களில் பயி­லும் மாண­வர்­

க­ளைப் பாது­காக்க கூடு­தல் நட­

வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த மாண­வர்­கள் பள்­ளிக்கு வரு­வ­தற்கு முன்பு கொசு விரட்­டித் திர­வத்­தைத் தட­விக்­கொள்­ள­வேண்­டும் என்­றும் இதை அவர்­க­ளது பெற்­றோர் உறுதி செய்ய வேண்­டும் என்­றும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் தெமா­செக் அற­நி­று­ன­மும் வலி­யு­றுத்­தின.

"டெங்கி பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் மெத்­த­னத்­து­டன் இருக்­கக்­கூ­டாது. அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து டெங்கி பாதிப்­புச் சங்­கி­லியை உடைத்­தெ­றி­வோம்.

"வெளிப்­பு­றங்­களில் இருக்­கும்­போது கொசு விரட்­டித் திர­வத்­தைத் தட­விக்­கொள்­வது போன்ற நட­

வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஊக்­கு­விக்க வேண்­டும். இதன்­மூ­லம் டெங்­கிக்கு எதி­ரான முயற்­சிக்­குத் தயா­ரா­க­லாம். வீட்­டில் ஏடிஸ் கொசு இனப்­பெ­ருக்­கத்­தைத் தடுக்க வேண்­டும்," என்று தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின்

சமூ­கக் கட்­ட­மைப்பு, பங்­கா­ளித்­து­வப் பிரி­வின் தலை­வர் வூன் சேட் நியூன் கூறி­னார்.