சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்க அணுகுமுறையைக் கடைப்பிடிக்க உதவும் திட்டம் 2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இன்னும் மின்னிலக்கமயமாகாத நிறுவனங்களும் அவற்றின் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்க அடிப்படை மின்னிலக்கத் தீர்வுகளை 'ஸ்டார்ட் டிஜிட்டல்' என அழைக்கப்படும் இத்திட்டம் வழங்குகிறது.
'ஸ்டார்ட் டிஜிட்டல்' திட்டத்தை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் எண்டர்
பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தொடங்கிவைத்தன.
இதுவரை 37,000க்கும் அதிகமான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இத்திட்டத்தால் பலன் அடைந்துள்ளன.
ஸ்மார்ட் டிஜிட்டல் திட்டத்தை நீட்டிப்பதுடன் தகுதி பெறும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விற்பனை உற்பத்தி, வர்த்தகத் திறன், இணையப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின்கீழ் நீட்டிக்கப்படும் 'ஸ்டார்ட் டிஜிட்டல்' திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்று அல்லது இரண்டு மின்னிலக்கத் தீர்வுகளை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
வர்த்தகத் தேவைகளைப் பொறுத்து, ஒரே நேரத்தில் இரண்டு தீர்வுகளையும் கடைப்பிடிக்கலாம் அல்லது தனித் தனியாகக் கடைப்பிடிக்கலாம்.
தற்போது இந்தத் தீர்வுகளை டிபிஎஸ் வங்கி, மேபேங்க், ஓசிபிசி வங்கி, யுஓபி வங்கி, சிங்டெல் நிறுவனம் ஆகியவை வழங்கு
கின்றன.
"மேலும் பல நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக தொடர்ந்து ஆதரவு வழங்குகிறோம். அப்போதுதான் இந்த நிறுவனங்களுக்கு மின்னிலக்க அணுகுமுறையில் நல்ல அனுபவம் கிடைக்கும்.
"அதைக் கொண்டு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் கிடைக்கும் வாய்ப்புகளை அவை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்," என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் பீட்டர் ஓங் தெரிவித்தார்.
'ஸ்டார்ட் டிஜிட்டல்' திட்டம்,
மின்னிலக்கமயமாதலை நோக்கி நிறுவனங்கள் முதல் அடி எடுத்து வைக்க உதவும் குறைந்த விலை மற்றும் எளிய முறையாகும்," என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகி லியூ சுவேன் ஹோங் தெரிவித்தார்.

