சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் ஒருவருக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.
இவரையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை 11 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 32 வயது ஆடவருக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்
டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு கூறியது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 12ஆம் தேதியன்று அந்த ஆடவருக்குக் காய்ச்சலும் உடலில் புண்ணும் ஏற்பட்டது.

