வழக்கறிஞர் சங்கத் தலைவருக்குப் புற்றுநோய்

வழக்கறிஞர் சங்கத் தலைவருக்குப் புற்றுநோய்

1 mins read
051efdbe-bb0c-409d-b8c3-cc3e8dfb652c
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு ஏட்ரியன் டான். படம்: ஏட்ரியன் டான் -

சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏட்ரியன் டான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த உயிர்க்கொல்லி நோயுடன் கடைசிவரை போராட இருப்பதாக அவர் நேற்று பிற்பகல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தமக்கு எத்தகைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. 56 வயது திரு டானின் மனைவி தற்காப்பு அமைச்சில் பணிபுரிகிறார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை.