கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் இயக்குநர் சபை உறுப்பினராக போக்குவரத்து அமைச்சின் முன்னாள் நிரந்தரச் செயலாளர் சோய் ஷிங் குவோக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவை மைய
மாகக் கொண்ட ரசல் ஸ்டீவன் பால்டிங்கும் அந்த இயக்குநர் சபையில் இடம்பெறுகிறார்.
இந்த இரண்டு புதிய இயக்கு நர்களும் ஆகஸ்ட் 1ல்
இயக்குநர் சபையில் இணைவர்.
நிலப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் வாய்ந்த இருவரும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறு
வனத்துக்குக் கூடுதல் வலுசேர்ப்பர் என்று அந்நிறுவனம் நேற்று கூறியது. 63 வயது திரு சோய், 2017ஆம் ஆண்டில் அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.
தற்போது அவர் ISEAS-யூசோஃப் இஷாக் பயிற்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகியாகவும் எஸ்பி சர்விசஸின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் தலைவர் லிம் ஜிட் போவும் குழுமத்தின் தலைமை நிர்வாகி யாங் பான் செங்கும் ஓய்வுபெறுவதால் அந்த குழுமத்தின் நிர்வாகம்
சீரமைக்கப்படுகிறது.

