கோழி விநியோகம்: பிந்தானில் திறக்கப்படும் 3 பண்ணைகள்

கோழி விநியோகம்: பிந்தானில் திறக்கப்படும் 3 பண்ணைகள்

1 mins read
2d8c85f6-8368-4532-b76e-e1df892a73ef
-

உயி­ருள்ள கோழி­களை சிங்­கப்­பூ­ருக்கு அனுப்­பி­வைக்­கும் நோக்­கு­டன் இந்­தோ­னீ­சி­யா­வின் பிந்­தான் தீவில் மூன்று புதிய பண்­ணை­களை அந்­நாட்­டின் வேளாண் உணவு நிறு­வ­னம் ஒன்று அமைக்க இருக்­கிறது.

இவ்­வாண்டு இறு­திக்­குள் சிங்கப்­பூ­ருக்­குக் கோழி­களை கடல்­வ­ழி­யாக அனுப்­பி­வைக்க ஜப்ஃபா கொம்­ஃபீட் இந்­தோ­னீ­சியா (ஜேசிஐ) எனும் அந்த நிறு­வ­னம் இலக்கு கொண்­டி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தோ­ஜெயா அக்­ரி­நு­சா­வின் துணை நிறு­வ­ன­மான ஜேசிஐ, பிந்­தான் தீவில் கோழிக் குஞ்சு பொரிப்­ப­கத்தை நடத்­து­கிறது. கோழிக் குஞ்­சு­களை அது ரியாவ் தீவு­களுக்கு அனுப்­பி­வைக்­கிறது. இந்­நி­லை­யில், பிந்­தா­னி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குக் கோழி­களை அனுப்­பி­வைக்­கும் முதல் பண்ணை வரும் செப்­டம்­பர் மாதம் தயா­ரா­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மூன்று பண்­ணை­களும் வெவ்­வேறு இடங்­களில் திறக்­கப்­படும் என்­றும் அவை ஒவ்­வொன்­றி­லும் தலா 150,000 கோழி­கள் இருக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­குப் போதிய கோழி­களை அனுப்­பி­வைக்க வேண்­டு­மா­யின் ஒவ்­வொரு பண்­ணை­யி­லும் குறைந்­தது 100,000 கோழி­கள் இருக்க வேண்­டும் என்று அறி­யப்­ப­டு­கிறது.

உயி­ருள்ள கோழி­களை மலே­சி­யா­வி­லி­ருந்து நிலம் வழி­யாக அனுப்ப ஏற்­படும் செல­வைக் காட்­டி­லும் அவற்­றைக் கடல் வழி அனுப்ப ஏற்­படும் செலவு அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.