சிங்கப்பூர் துறைமுகம், அறவே கரிமக் கழிவு இல்லா நிலையை எட்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து இருக்கிறது.
இதற்கு உதவி செய்யும் கடல்துறை திட்டங்களுக்குக் காப்புறுதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் 'கியூபிஇ' நிறுவனம் தனது காப்புறுதித் திட்டத்தை விரிவுபடுத்தும்.
பசுமை தொழில்நுட்பங்களைக் கைக்கொள்ளும் கடல் தொழில்துறையின் முயற்சிக்கு ஆதரவு தர தனது நிறுவனம் விரும்புவதாக 'கியூபிஇ' கடல்துறை வட்டாரத் தலைவர் திரு ராம சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் செயல்படும் கப்பல் கட்டுமான நிறுவனங்களுடன் சேர்ந்து கியூபிஇ செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அந்தக் கப்பல் கட்டுமான நிறுவனங்கள், லித்தியம், ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்கள், அமோனியா, மெத்தனால் போன்ற புது வகை எரிசக்திகளைப் பயன்படுத்துவதாக திரு சந்திரன் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.

