சிறுகுறு நிறுவனங்களுக்கு உதவும் நொடித்துப்போதல், கடனடைப்பு செயல்திட்ட விண்ணப்பக் காலம் 2024 ஜனவரி வரை நீட்டிப்பு

சிறுகுறு நிறுவனங்களுக்கு உதவும் நொடித்துப்போதல், கடனடைப்பு செயல்திட்ட விண்ணப்பக் காலம் 2024 ஜனவரி வரை நீட்டிப்பு

2 mins read
9485c03e-398a-4962-ab6f-3aaf31cff008
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் சிறிய நிறு­வ­னங்­கள் தங்­கள் கட­ன­டைப்பு ஏற்­பாட்டை மாற்றி அமைத்­துக் கொள்ள அல்­லது தொழிலை மூடி­விட உத­வும் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு நடை­மு­றை­யில் பங்­கெ­டுத்­துக் கொள்­வ­தற்­கான விண்­ணப்­பக் காலம் 18 மாதங்­கள் நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

'எளி­மை­யாக்­கப்­பட்ட நொடித்­துப்­போ­தல் செயல்­திட்­டம்' (SIP) என்று குறிப்­பி­டப்­படும் அந்­தச் செயல்­திட்­டத்­திற்கு 2024 ஜன­வரி 28ஆம் தேதி வரை விண்­ணப்­பிக்­க­லாம் என்று சட்ட அமைச்சு நேற்று அறி­வித்­தது.

அந்­தச் செயல்­திட்­டத்­திற்­கான விண்­ணப்ப காலம் இனி­மே­லும் நீட்­டிக்­கப்­ப­டாது என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக சிறிய நிறு­வ­னங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும் வாய்ப்­பு­ இ­ருப்­ப­தாக கவலை தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து 2021 ஜன­வரி மாதம் அந்­தச் செயல்­திட்­டம் அறி­மு­க­மா­னது.

விண்­ணப்ப காலம் ஆறு மாதம் என்று தொடக்­கத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. பிறகு 2022ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி வரை அது 12 மாதம் நீட்­டிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டு­கின்ற நிறு­வ­னங்­களில் ஏறக்­கு­றைய 95% நிறு­வ­னங்­கள் சிறு­குறு நிறு­வ­னங்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் கூடிய வாழ்க்கை என்ற கால­கட்­டத்தை நோக்கி சிங்­கப்­பூர் முன்­னேறு­கிறது.

என்­றா­லும்­கூட பல உல­கப் பிரச்சி­னை­கள், பொரு­ளி­யல் நில­வ­ரம் கார­ண­மாக தொழில் நடத்­து­வ­தற்­கான சூழ்­நிலை தொடர்ந்து சவால்­ மிக்­க­தா­கவே இருக்­கிறது என்­பதை சட்ட அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யது. சிங்­கப்­பூ­ரில் எல்­ல­கைள் படிப்­ப­டை­யாக 2022 ஏப்­ரல் 1ஆம் தேதி திறக்­கப்­பட்­டன.

அதனை அடுத்து சிறிய நிறு­வனங்­கள் தலைதூக்­கத் தொடங்­கின. என்­றா­லும் மீட்­சி­யைப் பொறுத்­த­வரை அவை இன்­ன­மும் தொடக்­கக் கட்­டத்­தி­லே­யே­தான் இருக்­கின்­றன.

இந்த நிலை­யில், பண­வீக்­கம் கூடு­கிறது. வட்டி விகி­தம் அதி­கரிக்­கிறது. பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­கிறது. இவற்­றின் கார­ண­மாக சிறு­குறு நிறு­வ­னங்­களுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது என்று அமைச்சு தெரி­வித்­தது.

எளி­மை­யாக்­கப்­பட்ட நொடித்­துப்­போ­தல் செயல்­திட்­டத்­தில் தனித்­த­னி­யான இரண்டு செயல்­திட்­டங்­கள் இருக்­கின்­றன. அவற்றின் உத­வி­யைப் பெற நிறு­வனங்­கள் விண்­ணப்­பிக்­க­லாம்.

தொழிலை தொடர்ந்து நடத்­தக்­கூ­டிய நிலை­யில் இருக்­கும் நிறு­வனங்­கள், தங்­கள் கடன் அடைப்பு ஏற்­பாட்டை மாற்றி அமைத்­துக்­கொள்ள உத­வும் எளிமையாக்­கப்­பட்ட கட­ன­டைப்பு மாற்று ஏற்­பாட்டுச் செயல்­திட்­டம் என்­பது அவற்­றில் ஒன்று.

தொழி­லைத் தொடர்ந்து நடத்த முடி­யாத நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய எளி­மை­யாக்­கப்­பட்ட நொடித்­துப் போதல் செயல்­திட்­டம் என்­பது மற்­றொன்று.

இந்­தச் செயல்­திட்­டங்­க­ளுக்­குத் தகு­தி­பெ­றக்­கூ­டிய, பணப் பிரச்­சினை­யில் சிக்கி இருக்­கும் நிறு­வ­னங்­கள் 2024 ஜன­வரி 28ஆம் தேதி­வரை உதவி பெற­லாம்.

நிறு­வ­னங்­க­ளின் விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால், அந்த நிறு­வ­னங்­களும் சம்­பந்­தப்பட்ட இதர நிறு­வ­ன­ங்களும் எளி­மை­யான, விரை­வான, செலவு குறைந்த கட­னடைப்பு ஏற்­பாடு மூலம் அல்­லது நொடித்­துப்­போ­தல் நடைமுறை மூலம் பலன் அடை­ய­லாம்.

கடன் கொடு­த்த­வர்­க­ளுக்குக் கூடு­மா­ன­வரை அதிக நன்மை கிடைக்கவும் வழிகள் உண்டு.