தீவின் முக்கிய இடங்களில் 6 கிலோ போதைப் பொருள் சிக்கியது

தீவின் முக்கிய இடங்களில் 6 கிலோ போதைப் பொருள் சிக்கியது

2 mins read
ae40c9a4-8f0f-45e0-bdaf-aa723ae3f1a5
போதைப் பொருள்களோடு, ஒரு சொகுசு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது (படம்: போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு) -
multi-img1 of 2

போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். செந்தோசாவில் உள்ள ஒரு ஹோட்டலில் 41 வயது ஆடவரும், 34 வயது பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து $313,000 மதிப்புள்ள ஆறு கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 1,894 கிராம் ஹெராயின், 270 கிராம் ஐஸ், 4,194 கிராம் கஞ்சா ஆகியவற்றோடு மற்ற பல போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சுமார் 900 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும் போதைப் பொருளுக்கு சமம் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கிட்டத்தட்ட 600 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும் போதைப் பொருளுக்கு சமம் என்றும் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு கூறியது.

அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 27) அன்று நடத்திய சோதனையில் செந்தோசாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சந்தேக நபர்கள் சிக்கினர். அறையில் பல போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்கள் ஷென்டன் வேயில் வசித்துவந்த ஒரு தனியார் குடியிருப்பு பகுதிக்கு சந்தேக நபர்கள் ‌அழைத்துசெல்லப்பட்டனர். அந்த வீட்டிலும் பல போதைப் பொருள்கள் இருந்தன.

போதைப் பொருள் கடத்துபவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கு எதுவானாலும் செய்வார்கள் என போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

500 கிரா­முக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் தூய ஹெரா­யின் கடத்­து­வோர் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கக்­கூ­டும்.