தாதிகளை தொடர்ந்து பணியில் தக்கவைத்துகொள்ள அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று இன்னும் பரவிவருகிறது. இது தாதியருக்கு பெரும் பளுவாக உள்ளது. அவர்களை ஊக்குவிக்க இந்த கூடுதல் சிறப்பு தொகை உதவும் என நம்பப்படுகிறது. இது குறித்து மேல் விவரங்கள் தாதியர் தினமான ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று அறிவிக்கப்படும்.
தாதியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதோடு, கொவிட்-19 காலகட்டத்தில் தாதிமை பணியில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

