செந்தோசாவுக்கும் மவுண்ட் ஃபேபருக்கும் இடையில் கம்பி வட வண்டிகளில் சென்ற 18 பயணிகள், கம்பிவட இயக்கமுறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 30 நிமிட நேரம் ஆறு வண்டிகளிலேயே இருட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்கள் அப்போது பூமிக்கு உயரே சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்தனர்.
கடைசியில் எல்லாரும் பாதுகாப்பாக வண்டிகளில் இருந்து இறங்கி வெளியேறினர். இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 9.15 மணிக்கு நிகழ்ந்தது.
இதனிடையே, இது பற்றி கேட்டதற்கு விளக்கம் அளித்த மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப் நிறுவனத்தின் பேச்சாளர், கம்பிவட இயக்க முறையை நிறுத்தி மறுபடியும் அதை இயங்க வைக்கவேண்டியதாயிற்று என்றார்.
இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதலில் வண்டிகளை அருகே உள்ள நிலையத்திற்குத் திரும்பி எல்லாரும் கீழே இறங்க வழி வகை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப் நிறுவனம், செந்தோசா மேம்பாட்டுக் கழகத்திற்கு முற்றிலும் சொந்தமானது. 18 பயணிகளும் பாதுகாப்பாக கீழே இறங்கிவிட்டனர்.
கடைசி பயணி இரவு 10.55 மணிக்கு கீழே இறங்கினார் என்று மவுண்ட் ஃபேபர் லெஷர் குருப் தெரிவித்தது.

