கொள்ளைநோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட 'பிடிஓ' திட்டங்கள் மூவாண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும்

கொள்ளைநோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட 'பிடிஓ' திட்டங்கள் மூவாண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும்

1 mins read
9502be3e-9c57-40a6-af30-83f06dbc5fa8
தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீட்டுத் திட்டத்தின் கற்பனைச் சித்திரம். கோப்புப் படம்: சாவ்பாவ் -

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட 'பிடிஓ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக திட்டங்கள் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் சனிக்கிழமையன்று (30 ஜூலை) இதைத் தெரிவித்தது.

இவ்வாண்டு முற்பாதியில் 7,200க்கும் அதிகமான வீவக வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதாக கழகம் கூறியது.

சுமார் 100 தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக திட்டங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு பிப்ரவரி, மே மாதங்களில் விற்கப்பட்ட வீடுகளைக் கொண்ட திட்டங்களும் அவற்றில் அடங்கும் என்று கழகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

இந்த வீடுகளைக் கட்டி முடிக்க இரண்டிலிருந்து 5.4 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதைச் சரிசெய்ய முடியாது என்பதை ஒப்புக்கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகி டான் மெங் டுய், ஈராண்டுகளாக நேர்ந்த பல இடையூறுகளைத் தொடர்ந்து பணிகள் மீண்டும் சீராகி வருவதாகக் கூறினார்.