கவிழ்ந்தது இயந்திரம், யாருக்கும் காயம் இல்லை

கவிழ்ந்தது இயந்திரம், யாருக்கும் காயம் இல்லை

1 mins read
f0a32011-e744-4849-8889-8ee04e085ab4
விபத்து டௌனர் சாலையில் நிகழ்ந்தது. படம்: சேஃப்டி வாட்ச் எஸ்ஜி / ஃபேஸ்புக் -

டௌனர் சாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீவக திட்டத்தின் கட்டுமானத் தளத்தில் கலவை இயந்திரம் கவிழ்ந்தது.

சனிக்கிழமை (30 ஜூலை) காலை ஒன்பதரை மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று தனக்கு வந்த கேள்விகளுக்கு மனிதவள அமைச்சு பதிலளித்தது.

'எல் அண்ட் எம் ஃபவுண்டேஷன் ஸ்பெஷலிஸ்ட்' நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் சோதனைகளை மேற்கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதி அதிலிருந்து துண்டிக்கப்பட்டு விழுந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.

இந்த விபத்து பதிவான படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

விபத்தால் கட்டுமானத் தளத்தைச் சுற்றியிருக்கும் உலோகத் தடுப்புகளில் சிலவும் விழுந்தன.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.