முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்வின் இயோ காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்வின் இயோ காலமானார்

1 mins read
844e3f14-ecc5-4acf-95d6-7486ab8b286d
2017ஆம் ஆண்டில் திரு எல்வின் இயோ. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான எல்வின் இயோ சனிக்கிழமை (30 ஜூலை) காலை காலமானார்.

அவருக்கு வயது 60.

புற்றுநோய்க்கு ஆளான திரு இயோ ஈராண்டுப் போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.

அவர் 2006ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டுவரை ஹொங் கா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

திரு இயோ தலைவராகவும் மூத்தப் பங்காளியாகவும் பணியாற்றிய 'வோங்பார்ட்னர்ஷிப்' சட்ட நிறுவனம் ஓர் அறிக்கையின் மூலம் அவரின் மறைவைப் பற்றித் தெரிவித்தது.

திரு இயோவின் மரணம் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.