மசெக, எதிர்த்தரப்பு தொகுதி மக்கள் எல்லாருக்கும் சேவை

மசெக, எதிர்த்தரப்பு தொகுதி மக்கள் எல்லாருக்கும் சேவை

2 mins read
3a5a5a96-7c60-41af-846a-71a9f11e8e10
-

அரசாங்கத்தின் கடப்பாடு பற்றி பிரதமர் லீ சியன் லூங் விளக்கம்

மக்­கள் செயல் கட்சி தொகு­தி­யில் அல்­லது அல்­லது எதிர்த்­த­ரப்புத் தொகு­தி­யில் மக்­கள் எங்கு வசித்­தா­லும் அவர்­க­ளுக்­குச் சேவை­யாற்ற அர­சாங்­கம் கடப்­பாடு கொண்­டி­ருக்­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

புதிய ரிவர்வேல் சமூக மன்றத்தை நேற்று திறந்து வைத்து திரு லீ உரை­யாற்­றி­னார்.

பழைய ரிவர்­வேல் சமூக மன்றம் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வெற்றுத்­தளத்­தில் அமைந்து இருந்­தது.

அந்த வட்­டார மக்­கள்­தொகைக்கு ஏற்ற அள­வுக்கு அது பெரி­ய­தாக இல்லை.

பல்­வேறு வச­தி­க­ளு­டன் புதிய சமூக மன்­றத்தை அமைப்­ப­தற்­கான திட்­டங்­கள் 2016ல் அறி­விக்­கப்­பட்­டன. அவை பொது­மக்­க­ளின் கருத்­து­கள், ஆலோ­ச­னை­க­ளு­டன் செயல்­ப­டுத்­தப்­பட்­டன.

அப்­போது செங்­காங் ஈஸ்ட் மசெக நிர்­வா­கத்­தின்கீழ் இருந்­தது. பிறகு 2020 பொதுத் தேர்­தலில் செங்­காங் குழுத்­தொ­கு­தியை எதிர்த்­த­ரப்பு பிடித்­த­போது அது அதன் வச­மா­கி­விட்­டது.

இருந்­தா­லும் செங்­காங்­கில் வசிக்­கும் மக்­க­ளுக்­குச் சேவை­யாற்று­வது என்று அர­சாங்­கம் தொடர்ந்து கடப்­பாடு கொண்­டி­ருக்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இதன் காரணமாகவே, அதிக மக்­க­ளின் பல­த­ரப்­பட்ட தேவை­களை நிறை­வேற்­றும் வகையில் புதிய சமூக மன்­றத்தை அமைப்­ ப­தற்­கான பணி­கள் தொடர்ந்­தன.

அந்­தச் சமூக மன்­றம் அமைந்­தி­ருக்­கும் பகுதி பொங்­கோல் ஈஸ்ட் தனித்­தொ­கு­தி­யின் ஓர் அங்­க­மாக இருந்­தது. பிறகு அது செங்­காங் குழுத்­தொ­கு­தி­யில் சேர்க்­கப்­பட்­டது.

செங்­காங் ஈஸ்ட் மசெக தொகுதி­யாகவோ அல்­லது எதிர்த் தரப்புத் தொகு­தி­யாகவோ இருந்­தா­லும் பல சேவை­யா­ளர்­களும் தொண்டூழி­யர்­களும் சமூக மன்ற நிர்­வா­கக் குழு­வி­லும் அதன் துணை குழுக்­க­ளி­லும் தொடர்ந்து இடம்­பெற்று மக்­க­ளுக்காகப் பல்­வேறு செயல்திட்­டங்­க­ளுக்கும் நட­வ­டிக்­கை­களுக்கும் ஏற்­பாடு செய்து உத­வு­கி­றார்­கள் என்றார் திரு லீ.

புதி­தாக திறக்­கப்­பட்ட ரிவர்­வேல் சமூக மன்­றம் ரிவர்­வேல் பிளா­சா­வுக்குப் பக்­கத்­தில் அமைந்துள்ளது.

சிங்­கப்­பூ­ரில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த அதி­க­மான பொருள்­களைக் கொண்டு அந்­தப் புதிய மன்­றம் கட்­டப்­பட்டு இருக்­கிறது.

அதில் இளை­யர்­கள், வேலை பார்ப்­ப­வர்­கள், முதி­ய­வர்­கள் உள்ளிட்ட பல­ருக்­கும் பல்­வேறு வச­தி­கள் இருக்­கின்­றன; குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மும் உள்­ளது.

பல்­நோக்கு அரங்கும் நடன அரங்­கு­களும் வகுப்­பறை­களும் இருக்­கின்­றன.

சமூக மன்­றங்­கள் இன்­றும் தொடர்ந்து பொருத்­த­மான அமைப்­பு­க­ளாக இருக்­கின்­றன என்று திரு லீ தெரி­வித்­தார்.

மக்­கள் கம்­போங்­கில் இருந்து இடம்­பெ­யர்ந்து நவீன அடுக்குமாடி வீட்­டுக்கு மாறி இருக்­கி­றார்­கள். அவர்­கள் அந்­தக் காலத்­தில் இருந்­தது­போல் சமூக நிலைய தொலைக்­காட்­சி­களைச் சார்ந்­தி­ருக்க வேண்டிய நிலை இனி இல்லை.

என்­றா­லும்­கூட சமூக நிலை­யங்­கள் தொடர்ந்து மிக முக்­கியப் பங்­காற்­று­கின்­றன என்று திரு லீ குறிப்­பிட்­டார்.