டிசம்பரில் கடவுச்சீட்டுக்கு ஒரு வாரம் காத்திருந்தால் போதும்

டிசம்பரில் கடவுச்சீட்டுக்கு ஒரு வாரம் காத்திருந்தால் போதும்

1 mins read
034d4dcd-b849-467a-80c6-166971707770
-

புதிய கட­வுச்­சீட்­டுக்கு (பாஸ்­போர்ட்) மனு செய்­யும் சிங்­கப்­பூரர்­கள் வரும் டிசம்­ப­ரில் இருந்து ஒரு வாரம் காத்­தி­ருந்­தால் ­போ­தும், கட­வுச்­சீட்டு கிடைத்­து­வி­டும்.

கொவிட்-19 தொற்­றுக்கு முன்­பும் இதே­போன்று ஒரே வாரத்­தில் அவர்­கள் கட­வுச்­சீட்­டைப் பெற முடிந்­தது.

அதே­போன்ற நிலைமை இந்த ஆண்டு முடி­வில் திரும்­பி­வி­டும் என்று குடி­நு­ழைவு, சோதனைச்­சா­வடி ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

இந்த ஆணை­யம் ஒவ்­வொரு நாளும் பெறும் கட­வுச்­சீட்டு விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் இந்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருக்­கிறது.

கட­வுச்­சீட்­டுக்­கான விண்­ணப்­பங்­கள் அதி­க­மா­னதை அடுத்து அதைச் சமா­ளிக்­கும் விதத்­தில் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்கு வந்­தன.

அதன் பிறகு எத்­தனை மனுக்­களைப் பரி­சீ­லிக்க முடி­யும் என்­பதைக் கணக்­கிட்­டும் அந்த ஆணை­யம் டிசம்­பர் மாத இலக்கை நிர்­ண­யித்துள்ளது.

ஆணை­யத்­தின் குடி­மக்­கள் சேவை நிலை­யத்­தின் இயக்­கு­நர் மூத்த உதவி ஆணை­யர் டோமினிக் சுவா நேற்று இந்த விவரங் களைத் தெரி­வித்­தார்.

புதிய கட­வுச்­சீட்­டைப் பெற இப்­போது குறைந்­த­பட்­சம் ஆறு வார காலம் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை இருக்­கிறது.

கொவிட்-19க்கு முன்பு கட­வுச்­சீட்­டுக்­கான விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை 2,000ஆக இருந்­தது. ஏப்­ரல் 1ஆம் தேதி எல்­லை­கள் திறக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு அது மே மாதம் நாள் ஒன்றுக்கு 7,000க்கும் அதி­க­மாகியது.

இந்த மாதம் ஆணை­யம் அன்­றா­டம் ஏறத்தாழ 4,500 விண்­ணப்­பங்­களைப் பெற்­றுள்­ளது.