நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் அக்டோபர் 16ஆம் தேதி தீமிதித் திருவிழா

நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுடன் அக்டோபர் 16ஆம் தேதி தீமிதித் திருவிழா

2 mins read
f0d6538f-7605-42af-9ea1-0063e17495e6
-

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யத்­தில் தீமிதி திரு­விழா இவ்­வாண்டு அக்­டோ­பர் 16ஆம் தேதி நடை­பெ­ற­வுள்­ளது. ஈராண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு இவ்­வாண்டு பாத ஊர்­வ­லத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லும் இணைந்து நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

2020ஆம் ஆண்டு ஒரு மாத கால விழா­வாக நடை­பெற்ற தீமி­தித் திரு­விழா கடந்த ஆண்டு வழக்­க­மான மூன்று மாத விழா­வாக அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

இவ்­வாண்­டும் வழக்­கம்­போல மூன்று மாதத் திரு­வி­ழா­வாக அனு­ச­ரிக்­கப்­ப­ட­வி­ருக்­கும் இவ்­வி­ழா­வின் முதல் நிகழ்ச்­சி­யாக தீமி­தித் திரு­வி­ழா­வுக்­கான கொடி­யேற்­றம் நாளை ஆகஸ்ட் 1ஆம் தேதி இடம்­பெ­றும்.

ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லுக்­கும் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லுக்­கும் இடை­யி­லான பக்­தர்­க­ளின் பாத ஊர்­வ­லம் இம்­முறை நடை­பெ­றும். ஆனால் அதில் பங்­கேற்­போ­ரின் எண்­ணிக்­கைக் கட்­டுப்­படுத்­தப்­படும்.

இது குறித்து கருத்­து­ரைத்த ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் நிர்­வா­கக் குழுத் தலை­வர் திரு சி. லட்­சு­மணன், "இரவு 9 மணிக்­குள் தீமி­திக்­கப் பதிவு செய்­து­கொண்­டோர் அன்­றைய தினம் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லில் தங்­கள் பதிவை உறு­தி­செய்­து­கொள்ள வேண்­டும். அப்­போது அவர்­க­ளுக்கு கைப்­பட்­டை­யும் காப்­பும் அணி­விக்­கப்­படும். பின்­னர் அவர்­கள் பெரு­மாள் கோயி­லி­லி­ருந்து மாரி­யம்­மன் கோயிலை நோக்கி தங்­கள் பாத ஊர்­வ­லத்­தைத் தொடங்­க­லாம்.

"இரவு 9 மணிக்கு மேல் தீமி­திக்­கப் பதிவு செய்­து­கொண்­டோர் அன்­றைய தினம் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லுக்கு வெளியே தங்­கள் பதிவை உறுதி­ செய்­து­கொள்ள வேண்­டும். அப்­போது அவர்­க­ளுக்கு கைப்­பட்­டை­யும் காப்­பும் அணி­விக்­கப்­படும். பின்­னர் அவர்­கள் வரி­சை­யில் நின்று மாரி­யம்­மன் கோயி­லுக்­குள் சென்று தீமி­திக்­க­லாம்," என்­றார்.

"தற்­போது கொவிட்-19 தொற்று எண்­ணிக்கை சற்று அதி­க­மாக இருப்­ப­தால் இந்­தப் பாது­காப்பு நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஒரே நேரத்­தில் அதி­க­மான எண்­ணிக்­கை­யில் பக்­தர்­கள் வரிசை பிடித்து நிற்­ப­தைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக இது கரு­தப்­ப­டு­கிறது. ஆகவே, பக்­தர்­கள் செப்­டம்­பர் 16ஆம் தேதி முன்­ப­திவு தொடங்­கும்­போது முன்­கூட்­டியே பதிந்­து­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்­றும் திரு லட்­சு­ம­ணன் விளக்­கி­னார்.

பக்­தர்­கள் பால்­கு­டம் செலுத்­து­தல், குடும்­பி­டு­தண்­டம், அங்­கப்­பி­ர­தட்­ச­ணம், தீக்­கு­ழி­யைச் சுற்­றி­வ­ரு­தல் போன்ற எல்லா நேர்த்­திக்­கடன்­க­ளுக்கும் முன்பதிவு அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

அனைத்து நட­வ­டிக்­கை­க­ளின் போதும் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­ட­வேண்­டும். விழா­வில் கலந்­து­கொள்­வோர் அனை­வ­ரும் முழு­மை­யா­கக் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­ வேண்­டும். அவர்­கள் எந்­நே­ர­மும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்­க­வேண்­டும் என்­றும் இந்து அறக்­கட்­டளை வாரி­யம் அறி­வு­றுத்­தி­யது.

தீமி­தித் திரு­வி­ழா­வில் பங்­கேற்க விரும்­பும் பக்­தர்­கள் heb.org.sg எனும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் கட்­டா­யம் பதிவு செய்­வ­து­கொள்­ள­வேண்­டும். முன்­ப­திவு 16 செப்­டம்­பர் 2022ல் தொடங்­கும்.

பக்­தர்­கள் வீட்­டி­லி­ருந்­த­ப­டியே தீமி­தித் திரு­வி­ழா தொடர்பான நிகழ்ச்சிகளை இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் இணை­யப்­பக்­கத்­தி­லும் யூடி­யூப் பக்­கத்­தி­லும் நேர­லை­யில் காண­லாம்.