டவுனர் ரோட்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டுமான தளம் ஒன்றில் நேற்றுக் காலை சுமார் 9.30 மணிக்கு கலவை இயந்திரம் கவிழ்ந்து விழுந்துவிட்டது.
அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று மனிதவள அமைச்சு, அதுபற்றிக் கேட்டபோது தெரிவித்தது.
எல்&எம் பவுண்டேஷன் ஸ்பெஷலிஸ்ட் என்ற நிறுவனம் வேலையில் அமர்த்தியிருந்த மூன்று பேர் அந்த இயந்திரத்தைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது கலவையை மேலே அனுப்பும் அந்த இயந்திரத்தின் பகுதி சாய்ந்து விழுந்துவிட்டது
அந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அது பற்றி அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

