இனவாதக் கருத்துகள்: இயல்புதான் என அனுசரித்துப்போவது சரியான ஒன்றல்ல

இனவாதக் கருத்துகள்: இயல்புதான் என அனுசரித்துப்போவது சரியான ஒன்றல்ல

4 mins read
461ba2b2-e925-410d-9c83-2940f9291b26
நடின் சுவாசெய்தியாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

என்­னு­டைய பழைய பள்ளித் தோழியை ஒரு மாதம் முன்பு மதிய உணவு நேரத்தில் சந்­தித்­தேன். வேலை எல்­லாம் எப்­படிப் போ­கிறது, உன்­னு­டன் வேலை பார்க்­கும் சக­ ஊ­ழி­யர்­கள் எல்­லா­ரும் எப்­படி? என்று தோழியிடம் கேட்­டேன்.

ஒரு பெரு­மூச்­சு­விட்ட என் தோழி, சிலர் வெளிப்­ப­டுத்­தும் கருத்­து­கள் தனக்குச் சங்­க­டம் தரு­வ­தா­கக் கூறி­னார். அது பற்றி துரு­வித்­து­ருவி கேட்­ட­போது, சக­ ஊ­ழி­யர்­களில் ஒரு சிலர் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்கு இடை­யில் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் சிறு­பான்மை இனத்­த­வர்­கள் பற்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரித்துக்கொள்­வார்­கள் என்று அந்­தத் தோழி கூறி­ய­தைக் கேட்டு எனக்கு அதிர்ச்­சி­யா­கி­விட்­டது.

தோழி வேலை பார்க்கும் அலு­வ­ல­கத்­தில் மேசை­கள் நெருக்கமாக இருக்கும் என்­ப­தால் அங்கு ஊழி­யர்கள் தங்­க­ளுக்­குள் அரட்டை அடித்­துக்கொள்­வது என் தோழி காதில் விழும்.

அவர் ஓர் இந்­தி­யர். அவ­ருக்கு வயது 20களில் இருக்­கும். தன்­னை­விட மூத்த ஊழி­யர்­கள் தங்­க­ளுக்கு இடை­யில் இதர இனங்­களைப் பற்றி கேலி பேசி கிண்­ட­ல­டித்­துக்கொள்­வதை தடுக்­கவோ மறுக்­கவோ அவரால் முடி­யாது. வேலை போய்­வி­ட­லாம் என்ற பயத்­தில் அது பற்றி பேச­வும் என் தோழி தயங்­கு­வார்.

உத­விக்கு யாரும் இல்­லாத நிலை­யில் என்­னு­டைய தோழி இருப்­பதைப் பார்க்­கும் எனக்கு மனம் சங்­க­ட­மா­கி­விட்­டது.

சக­ ஊ­ழி­யர்­க­ளின் இரக்­க­மில்­லாத வார்த்­தை­களைச் செவி­ம­டுக்­கும்­போது என்­ தோழி அதை ஒரு மனக்­கா­ய­மாக உணர்­கி­றார். ஆனால் அவ­ரு­டைய செய்கை­களை எல்­லாம் பார்க்­கும்போது அத்­த­கைய ஏச்­சு­பேச்­சு­களை எல்­லாம் வழக்­க­மான ஒன்­றாக அவர் ஏற்­றுக்­கொண்­டு­விட்­ட­தாகவே தெரி­கிறது.

சிங்­கப்­பூர் சென்ற வியா­ழக்­கி­ழமை இன நல்­லி­ணக்க நாளைக் கொண்­டா­டி­யது.

பல்வேறு இன, கலா­சார மக்­கள் ஒன்றிணைந்து அதைக் கொண்­டா­டி­ய­தைப் பார்க்­கும்போது அது பொருள் பொதிந்த ஒன்­றா­கவே தெரிந்­தது.

அதே­வே­ளை­யில், இயல்பு நிலையிலான இன­வா­தம் போன்ற பிரச்­சினைகள் நம் சமூ­கத்தைப் பீடித்­துள்ள நோய்­க­ளா­கவே தொடர்­கின்­றன. சிறு­பான்மை இனத்­த­வர்கள் அன்­றா­டம் எதிர்­நோக்­கு­வது இது­தான் என்­றால், இதைத் தடுக்க என்ன செய்­தாக வேண்­டும்?

பிர­த­மர் லீ சியன் லூங், சென்ற ஆகஸ்ட்டில் தேசிய தினப் பேரணி உரை யில் மூன்­றில் ஒரு பகுதியாக, இனம், சம­யம் தலைப்பு­கள் பற்றி பேசி­னார். தொற்று காலத்­தின்­போது இன உற­வுகள் நெருக்­கடிக்கு உட்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். மனப்­போக்கு மாற்­றமே இன­வா­தத்­திற்கு உண்­மை­யான தீர்வு என்­பதை அவர் ஒப்புக்­கொண்­டார். சரி­யான திசை­யில் மக்­களைத் திருப்­பி­வி­டு­வ­தில் சட்­டம் பங்­காற்ற முடியும் என்­றார் அவர்.

'இன நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்புச் சட்­டம்' என்ற ஒரு புதிய சட்­டம் நிறை­வேற்­றப்­படும் என்­றும் பிறகு அவர் அறி­வித்­தார்.

இப்­போது நடப்­பில் இருக்­கும் 'சமய நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்புச் சட்­டம்' 1992ல் நடப்­புக்கு வந்­தது. ஒரு முறை­கூட அது பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தில்லை.

இருந்­தா­லும் சகிப்­புத்­தன்­மை­யை­யும் சமய நல்­லி­ணக்­கத்தையும் மேம்­ப­டுத்­த­ அது உதவி இருக்­கிறது. அதுபோலவே புதிய சட்­ட­மும் உத­வும் என்றார் பிர­த­மர்.

நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­தக்­கூ­டிய தேசிய கொள்­கை­கள் இருக்­கின்­றன. கடந்த ஆண்­டில் இனப் பிரச்­சி­னை­களில் அதிக ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­பட்டு இருக்­கிறது. இருந்­தா­லும்­கூட இயல்பு நிலையிலான இன­வா­தம் நீடித்த ஒரு பிரச்சினை­யா­கவே இருந்து வரு­கிறது.

மலாய்க்­கா­ர­ரான என்­னு­டைய மற்­றொரு தோழி, டிக்­டாக் காணொ­ளி­யில் இன­வாதக் கருத்து ஒன்றைத் தான் பார்த்­த­தா­க­வும் அது தனக்கு வியப்­ப­ளிக்­க­வில்லை என்றும் ஆனால் தான் ஏமாற்­றம் அடைந்­து­விட்­ட­தா­க­வும் என்­னி­டம் கூறி­னார்.

அந்­தக் காணொ­ளியைத் தேடிப் பார்த்தேன். டிக்டாக்கில் தெரி­விக்கப்பட்டு இருந்த கருத்துக்கு 100க்கும் மேற்­பட்ட ஆத­ர­வு­கள் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தன. ஆனால் நான்கே நான்கு டிக்­டாக் பய­னர்­கள் மட்­டுமே அந்த இன­வாதக் கருத்தைக் கண்­டித்து இருந்­தார்­கள்.

இரு எண்­ணங்­கள் என் மன­த்தில் ஓடின. மன­தைப் பாதிக்­கக்­கூ­டிய இன­வாத கருத்து­களைத் தெரி­விப்­பது மக்­களுக்கு எந்த அளவுக்கு எளி­தாக இருக்­கிறது என்­பது அவற்­றில் ஒன்று.

டிக்­டாக்­கில் கருத்து தெரி­வித்­த­வரை சரிப்­ப­டுத்த முயன்றவர்­க­ளின் எண்­ணிக்கை­யும் அதற்கு ஆத­ரவு தெரி­வித்­த­வர்­களின் எண்­ணிக்­கை­யும் 4:100 என்று இருக்­கிறது. இது என் மன­த்தில் ஓடிய இரண்­டா­வது சிந்­தனை.

டிக்­டாக்­கில் அந்­தக் கருத்­தைப் பார்த்­த­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அதை ஒப்­புக்­கொள்­கி­றார்­களா? அல்­லது வெளியே கருத்து எதை­யும் தெரி­யப்­ப­டுத்த வேண்டிய தேவை இல்லை என்ற எண்­ணத்­து­டன் மௌன­மாக பெரும்­பா­லா­ன­வர்­கள் இருக்­கி­றார்­களா? என்ற இரண்டு கேள்­வி­கள் என் மன­த்தில் எழுந்­தன.

முன்பு நானும் இந்த இரண்­டா­வது பிரி­வி­ன­ரில் ஒரு­வ­ரா­கவே இருந்­தேன். ஆனால் அப்­படி நான் இருந்­தி­ருக்­கக் கூடாது.

சீன­ரான நான், சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­ன்மை இனச் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர் என்ற முறை­யில், அனு­கூ­ல­மான ஒரு நிலை­யில் இருக்­கி­றேன் என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றேன்.

பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டும்­போது மனம் என்ன பாடு­படும் என்­பதை ஒரு­போ­தும் புரிந்­து­கொள்­ளாத ஒரு நிலை­யில் நான் இருப்­பேன் எனலாம்.

ஆனால் இயல்பான இனவாத ஏச்சு­பேச்­சு­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டிய சிறு­பான்­மை­யி­ன­ரி­டம் நான் கருணையுடன் நடந்­து­கொள்ள இய­லாது என்­பது அதற்­கான பொரு­ளல்ல.

இன­வாதக் கருத்­து­கள் தங்­களை நோக்கிக் கூறப்­ப­டும்­போது அவற்­றால் தாங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக என்­னி­டம் கூறும் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளான என்­ நண்­பர்­க­ளுக்­காக நான் வருத்­தப்­ப­டு­கி­றேன்.

அதே­வே­ளை­யில், அத்­த­கைய கருத்து­கள் கூறப்­ப­டும்­போது அதை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு நிலைக்கு சிலர் வந்­து­விட்­டார்­கள் என்­பதை நினைக்­கும்போது­தான் என் மனம் மேலும் வேதனை அடை­கிறது.

வெளிப்­ப­டை­யா­கப் பேச­வேண்­டி­யது­தான் இதில் நாம் செய்­யக்­கூ­டிய ஒன்று என்று நான் நம்­பு­கி­றேன்.

நீங்­கள் சில­ரு­டன் சேர்ந்து குழு­வாக இருக்­கை­யில், உங்­க­ளு­டன் இருப்­போரில் சிறு­பான்மை இனத்­த­வர் ஒருவர்கூட இல்லை என்­றா­லும், யாரோ ஒரு­வர் ஏதோ ஓர் இன­வாதக் கருத்தை வெளிப்­படுத்­தினால் அது தவறு என்று கூறுங்­கள். உங்­க­ளி­டம் ரக­சி­ய­மாக இன­வாத நகைச்­சுவை ஒன்றை யாரா­வது கூறினால் அதை மறுத்து, கூறி­ய­வருக்குப் புத்­தி­மதி சொல்­லுங்­கள்.