ஹவ்காங்கில் $1 மி. விற்கப்பட்ட வீவக வீடு

ஹவ்காங்கில் $1 மி. விற்கப்பட்ட வீவக வீடு

1 mins read
e6a3bf2d-ff3c-4913-9787-3aa6507835ae
படம்: கூகிள் வரைப்படம்/StraitsHomes -

ஹவ்காங் வட்டாரத்தில் வீவக எக்சிகியூட்டிவ் வீடு $1.073 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் வீவக வீடு ஒரு மில்லியனுக்கு மேல் விற்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

வீடு விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் இந்த விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என சொத்து முகவர்கள் கூறுகின்றனர்.

புளோக் 852 ஹவ்காங் சென்ட்ரலில் அமைந்துள்ள வீட்டின் பரப்பளவு 1,485 சதுர மீட்டர். இந்த பரந்த பரப்பளவில் வீடுகள் பொதுவாக கட்டுப்படுவதில்லை.

இந்த வீடு 1999ல் கட்டப்பட்டது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எக்சிகியூட்டிவ் வீடுகளைக் கட்டுவதை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிறுத்திகொண்டது.

இந்த புளோக், ஹவ்காங் பேருந்து நிலையத்துக்கும் ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்துக்கும் அருகே அமைந்துள்ளது. அதோடு கடைத்தொகுதி, பூங்கா போன்ற வசதிகளும் அருகாமையில் உள்ளன.