சமூக அளவில் சூதாடுவது இனி குற்றமல்ல

சமூக அளவில் சூதாடுவது இனி குற்றமல்ல

1 mins read
fc21e2db-059c-4851-9ee5-92fae150b6e3
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சமூக அளவில் சூதாடுவது குற்றமாக வகைப்படுத்தப்படாது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நண்பர்களுடனோ குடும்பத்தாருடனோ மாஜோங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு சூதாடுவது இனி குற்றமாக வகைப்படுத்தப்படாது.

இதற்கு வழிவகுக்கும் புதிய சட்டம் நாளை (ஆகஸ்ட் 1) நடப்புக்கு வருகிறது.

சமூக அளவில் சூதாடுவது இப்போதும் சட்டவிரோதமானது என்று வகைப்படுத்தப்படவில்லை.

எனினும், அது குறித்து தற்போதைய சட்டங்களில் தெளிவாக விவரிக்கப்படவில்லை.

சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இதர மாற்றங்களின்படி 21 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சூதாடுவது குற்றமாகும்.

'சிங்கப்பூர் பூல்ஸ்' நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அங்கு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட குறைந்தது 18 வயதாகியிருக்கவேண்டும்.