25,000 தாதியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை

25,000 தாதியருக்கு சிறப்பு ஊக்கத்தொகை

1 mins read
e44c67ab-5859-405d-9973-72f62cef01e0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொது சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 25,000க்கும் மேற்பட்ட தாதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகை தாதியரின் சம்பளத்தில் 1.7 மாதங்களுக்கும் 2.1 மாதங்களுக்கும் இடைப்பட்டு இருக்கும்.

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார அமைப்பு, சிங்ஹெல்த் ஆகியவற்றில் பணிபுரியும் தாதியர் ஊக்கத்தொகையை பெறுவர்.

ஆகஸ்ட் ஒன்று தாதியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுகாதார அமைப்புகளுக்காக அயராது உழைக்கும் தாதிகளுக்கு நமது பாராட்டுகளை தெரிவிக்க இதுவே சிறந்த தருணம் என்று அமைச்சு கூறியது.

புதிய தாதிகளை ஈர்க்கவும், தற்போது பணியில் இருக்கும் தாதியரை தக்கவைத்துகொள்ளவும் அவர்களுடைய அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டது. சம்பள உயர்வின் முதல் கட்டம் சென்றாண்டு ஜூலையில் இடம்பெற்றது. இரண்டாவது கட்டமாக சம்பளம் சென்ற மாதம் உயர்த்தப்பட்டது