சமூக சூதாட்டம் தொடர்பான விதிகள் இன்றுமுதல் அமல்

வீடு­களில் நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரு­டன் விளை­யாடும் மாஜோங், போக்­கர் போன்ற சமூக சூதாட்­டங்­கள் தொடர்­பிலான புதிய சட்­டங்­கள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் நடப்­புக்கு வருகின்­றன.

அத்­த­கைய சூதாட்­டங்­கள் இப்­போது சட்­ட­வி­ரோ­த­மா­னவை அல்ல.

இருந்­தாலும் அவை பற்றி இப்­போ­தைய சட்­டங்­களில் தெள்­ளத்­

தெ­ளி­வான வரை­மு­றை­கள் இல்லை. எவை எவை ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்­ப­தற்­கான தெள்­ளத்தெளி­வான அள­வீ­டு­களும் நெறி­மு­றை­களும் புதிய சட்­டங்­களில் இடம்­பெற்று உள்ளன.

'சூதாட்டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டம்' என்ற அந்­தப் புதிய சட்­டத்­தின்­கீழ் இதர பல மாற்­றங்­களும் அமலாகும். 21 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் சூதா­டு­வது குற்­றம் என்று புதிய சட்­டம் தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் சூதாட்ட நடை­

மு­றை­களை மேற்­பார்­வை­யி­டு­வ­தற்­கான புதிய விதி­மு­றை­களும் புதிய ஒழுங்­கு­முறை ஆணை­ய­மும் இன்று முதல் நடப்­புக்கு வரு­வ­தாக உள்­துறை அமைச்சு நேற்று அறி­வித்­தது.

நாடா­ளு­மன்­றத்­தில் புதி­தாக கடந்த மார்ச் மாதம் சட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அதை­ய­டுத்து இந்த மாற்­றங்­கள் நடப்­புக்கு வரு­கின்­றன.

நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்டபோது விவா­தத்­தில் கலந்­து­கொண்டு பேசிய உறுப்­

பி­னர்­கள், மின்னிலக்கத் தொழில்­நுட்­பம் கார­ண­மாக புதுப்­புது வடி­வி­லான சூதாட்­டங்­கள் தலை­

யெ­டுப்­பது பற்றி கவலை தெரி­வித்து இருந்­தார்­கள்.

புதி­தாக அமை­ய­வி­ருக்­கும் சூதாட்ட ஒழுங்­கு­முறை ஆணை­யம், இப்­போ­தைய 'சூதாட்டக்கூட ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின்' பணி­களைத் தன்­வ­சம் எடுத்­துக்­கொள்­ளும்.

அத்துடன், சிங்­கப்­பூ­ரில் எல்லா வகையான சூதாட்­டங்­க­ளை­யும் ஒழுங்குபடுத்­து­வ­தற்கு ஏது­வாக புதிய ஆணை­யத்­துக்கு மேலும் பல அதி­காரங்கள் இருக்­கும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, தேசிய சூதாட்ட பிரச்­சினைத் தீர்வு மன்றம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து செயல்­பட்டு சூதாட்­டத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய சமூக பாதிப்­பு­களை ஆணை­யம் குறைக்கும்.

அதே­வே­ளை­யில், காவல்­துறை தொடர்ந்து அம­லாக்க நட­வ­டிக்­கை­களை எடுத்து வரும். இந்த நட

­வ­டிக்­கை­கள் கார­ண­மாக சூதாட்­டப் போக்­கு­களும் தொழில்­நுட்­பப் போக்­கு­களும் எப்­ப­டி­யெல்லாம் தலை­தூக்­கு­கின்­றன என்­பதை அர­சு நன்கு தெரிந்­து­கொள்ளும்.

சூதாட்டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­கீழ், குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் நேரடி­யா­கச் சமூக சூதாட்­டங்­களில் ஈடு­ப­டு­வது சட்­ட­வி­ரோ­த­மான செயல் அல்ல. அதற்கு வயது வரம்­பும் இல்லை.

ஆனால், அத்­த­கைய சூதாட்­டங்­கள் ஒரு­வ­ரின் வீட்­டில் நடக்­க­வேண்­டும். எந்­த­வொரு தொழி­லா­க­வும் அதை நடத்த முடி­யாது.

இருந்­தா­லும் இணை­யம் மூல மான சமூக சூதாட்­டங்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

குறிப்­பிட்ட வயதை எட்­டா­த­வர்­கள் சூதா­டு­வது அல்­லது சூதாட்ட இடங்­களுக்­குச் செல்­வது ஒரு குற்­ற­மா­கும்.

ஆனாலும் சிங்­கப்­பூர் பூல்ஸ் நிறு­வனத்­தின் நிலை­யங்­கள் போன்ற நுழைவுப் பரி­சோ­தனை தேவைப்­ப­டாத இடங்­கள் இதற்கு விதி­வி­லக்கு பெறும்.

புதிய சட்­டங்­க­ளின்­படி தனி­யார் நிறு­வனங்­கள் உரி­மம் பெற்ற பிறகு­ தான் சூதாட்­டத்­துக்குப் பணம் கட்­டு­வது, லாட்டரி நடத்­து­வது போன்ற சூதாட்­டச் சேவை­களை வழங்க முடி­யும்.

புதிய சட்­டம் சூதாட்­டக் கூடங்­

க­ளிலும் இயந்­திர அறை­க­ளி­லும் பினா­மி­கள் பேரில் யார் சூதாடி னாலும் அதைக் குற்­றச் செயலாகக் கரு­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!