மலேசியர்கள் உள்ளிட்ட பலருக்கு கொர்பான் இறைச்சி

மலேசியர்கள் உள்ளிட்ட பலருக்கு கொர்பான் இறைச்சி

1 mins read
6f8af325-461e-4e94-9f32-695e5ed02cae
-

ஹஜ்­ஜுப் பெரு­நாள் கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக நேற்று கிட்­டத்­தட்ட 600 குடும்­பங்­க­ளுக்கு இறைச்­சிப் பொட்­ட­லங்­கள் வழங்­கப்­பட்­டன. ஒவ்­வொரு குடும்­பத்­திற்கும் 2 கிலோ இறைச்சி வழங்­கப்­பட்­டது. தியா­கத் திரு­நா­ளா­கக் கரு­தப்­படும் ஹஜ்­ஜுப் பெரு­நாள் ஜூலை 9ஆம் தேதி கொண்­டா­டப்­பட்­டது.

கால்­ந­டை­க­ளைப் பலி­யிட்டு, அவற்­றின் இறைச்­சியைத் தேவை­யுள்­ளோ­ருக்கு தான­மாக வழங்­கும் கொர்­பான் சம­யச்­ச­டங்­கும் வழி­பா­டும் இந்­தப் பெரு­நா­ளை­யொட்டி நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

ஒனான் ரோட்­டில் உள்ள எம்­சி­ஏ­எஸ் என்­னும் முஸ்­லிம் சங்­கக் கட்­ட­டத்­தில் நேற்று இறைச்­சிப் பொட்­ட­லங்­கள் வந்­தி­றங்­கின. 60க்கும் மேற்­பட்ட கார்­க­ளி­லும் வேன்­க­ளி­லும் அவை கொண்டு வரப்­பட்­டன. மூன்று மணி நேரத்­தில் அவை அத்­த­னை­யும் பய­னா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. இங்­குள்ள 50 மலே­சி­யர்­க­ளுக்­கும் இறைச்­சிப் பொட்­ட­லங்­கள் தரப்­பட்­டன.