ஆனந்தக் கண்ணீர் கண்டு ஆனந்தம்; பாலூட்டும் தாயின் பரிதவிப்புக்கு விடை

ஆனந்தக் கண்ணீர் கண்டு ஆனந்தம்; பாலூட்டும் தாயின் பரிதவிப்புக்கு விடை

3 mins read
3c564edf-3d8f-4422-909e-0cd8e65d07b2
தாய்ப்பால் ஊட்டுவதில் பெண்களுக்கு உதவி, வெற்றியடைந்த மருத்துவர் மைதிலி பாண்டி, 41. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் தாய்ப்­பால் ஊட்­டு

­வ­தில் தாய்­மார்­க­ளுக்­குப் பேரு­த­வி­யாக இருந்து வரு­கி­றார்­கள் சில பெண்­கள். இன்று (ஆகஸ்ட் 1) தொடங்­கும் உலக தாய்ப்­பா­லூட்­டும் வாரத்தை முன்­னிட்டு அந்­தப் பெண்­க­ளின் உன்­ன­தப் பணி­கள் வெளி­யி­டப்­பட்டுள்­ளன.

220 லிட்டர் தாய்ப்பால் தானம்

அவர்­களில் ஒரு­வ­ரான பெர்லி குவேக், 41, என்­ப­வர் கேகே மருத்­து­வ­மனை தாய்ப்­பால் வங்­கி­யின் ஆகப்­பெ­ரிய கொடை­யா­ளர் என்­னும் பெரு­மைக்­கு­ரி­ய­வர். அர­சாங்க ஊழி­ய­ரான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்­வாண்டு ஜூலை வரை கிட்­டத்­தட்ட 220 லிட்­டர் தாய்ப்­பாலை இந்த வங்­கிக்­குத் தான­மாக வழங்கி உள்­ளார்.

"எனக்கு அதி­க­மான தாய்ப்­பால் சுரப்­பது கட­வுள் தந்த வரம். இதனை, குழந்­தைக்கு ஊட்ட தாய்ப்­ பால் தேடும் தாய்­மார்­களுக்கு ஏன் தான­மாக வழங்­கக்­கூ­டாது," என்று கேட்­கி­றார் திரு­மதி குவேக்.

கேகே மருத்­து­வ­மனை தாய்ப்­பால் வங்­கியை பல­முறை கடந்து சென்­ற­போ­தும் தமக்கு முதல் குழந்தை பிறந்து அதற்கு சில உடல்­நலப் பிரச்­சி­னை­கள் எழுந்­த­போ­து­தான் தாய்ப்­பா­லின் அரு­மையை தாம் அறிந்­த­தாக இவர் கூறுகிறார். தாய்ப்­பால் கொடை­யா­ளர் என்ற வகை­யில் மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை ரத்­தப் பரி­சோ­த­னைக்­குச் செல்­வ­தோடு கொடை தொடர்­பான பல கேள்­வி­க­ளுக்­கும் இவர் பதி­ல­ளிக்க வேண்­டும்.

கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட திருமதி குவேக், இரு வாரங்­க­ளுக்கு தாய்ப்­பால் தானத்தை நிறுத்­தி­னார்.

மாதம் 22 முதல் 25 லிட்­டர் வரை தாய்ப்­பால் வழங்கி வந்த இவ­ருக்கு இரண்­டா­வது குழந்தை பிறந்து அதற்கு ஒரு வயது ஆன­தும் இவ­ரி­டம் தாய்ப்­பால் வாங்­கு­வதை வங்கி நிறுத்­தி­விட்­டது. வளர்ந்த பிள்­ளை­க­ளின் தாயிடம் இருந்து வாங்­கப்­படும் தாய்ப்­

பா­லின் தன்­மை­யில் மாற்­றம் இருக்­கும் என்­ப­தால் வங்கி அதற்­கான சில கோட்­பா­டு­களை வைத்­துள்ளது.

'த இண்­டக்­ரேட்டிவ் மெடிக்­கல் சென்­டர்' என்­னும் மருத்­து­வ

­நி­லைய மருத்­து­வ­ரான மைதிலி பாண்டி, 41, தாய்ப்­பால் ஊட்­டு­

வ­தில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வோ­ருக்கு உதவி வரு­கி­றார்.

'தாய்ப்­பால் ஊட்­டும் தாய்­மார்­கள் ஆத­ர­வுக் குழு' என்­னும் உள்­ளூர் அற­நி­று­வ­னத்­தில் இணைந்த இவர், குழு­வின் தொண்­டூ­ழிய ஆலோ­ச­கர்­க­ளுக்கு முன்­னோடி பயிற்­று­ந­ராக இருந்து வரு­கி­றார்.

"தாய்­மார்­க­ளின் பாலூட்­டும் பய­ணத்­தில் உதவ பல­வித ஏற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்டி உள்­ளது. சிலர் தாய்ப்­பாலை மட்­டுமே தங்­க­ளது குழந்­தைக்கு ஊட்­டு­வர்.

"வேறு சிலர் தாய்ப்­பா­லை­யும் புட்­டிப்­பா­லை­யும் ஊட்­டு­வர். இவ்­வ­ளவு­தான் என்­னால் முடி­யும் என்று பின்­வாங்­கும் தாய்­மார்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்து உத­வு­வது எனது விருப்­பம்," என்­கி­றார்

திரு­மதி மைதிலி.

கொள்­ளை­நோய்க் காலத்­தில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய வேண்­டிய நிலை­யில் தாய்­மார்­

க­ளி­டம் குழந்­தைக்­குப் பாலூட்­டும் போக்கு அதி­க­மாக இருந்­த­தைக் கண்டு மனம் நெகிழ்ந்­தாக இவர் கூறு­கி­றார்.

"பிறந்­த­துமே புட்­டிப்­பாலை கொடுத்­து­வி­டு­வ­தால் சில குழந்­தை­கள் தாய்ப்­பாலை மறுக்­கும். அது­போன்ற சம­யங்­களில் குழந்­தை­களை மார்­போடு அணைத்­துக்­கொள்ள தாய்­மார்­க­ளுக்­குச் சொல்­லித் தரு­வேன். அது ஒரு மந்­தி­ரம்­போல வேலை செய்­யும்.

"முத­லில் மறுத்த குழந்தை இப்­போது தாய்ப்­பா­லைத் தேடு­வதை அறிந்து மகி­ழும் தாய்­மார்­கள் அதனை ஊட்டி ஆனந்­தக் கண்­ணீர் விடு­வர். அத­னைப் பார்த்து நான் ஆனந்­தம் அடை­வேன். இப்­படி நடக்­கும் ஒவ்­வொரு முறை­யும் எதையோ சாதித்­த­தாக உணர்­வேன்," என்று விளக்­கி­னார் திரு­வாட்டி மைதிலி.

பாலூட்டும் பெண்களுக்கான சிறப்பு மார்க்கச்சை

இவரை அடுத்து, பாலூட்­டும் தாய்­மார்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டு­வ­தில் ஃப்ளோரென்ஸ் டே, 38, என்­ப­வ­ரின் பணி முக்­கி­ய­மா­னது. ஆசிய தாய்­மார்­க­ளுக்­கா­கவே பாலூட்­டும் வச­தி­யு­டன் கூடிய மார்­க்கச்­சையை வடி­

வ­மைக்­கி­றார் இவர். ஆசி­யப் பெண்­க­ளின் உட­ல­மைப்­புக்­கும் வட்­டார வெப்­ப­நி­லைக்­கும் ஏற்ற மார்க்­கச்சையை வடி­வ­மைப்­பது இவ­ரது திறன். தாம் முதல் குழந்­தை­யைப் பெற்­ற­போது பாலூட்ட ஏது­வான மார்க்­கச்­சை­யைத் தேடி அலைந்­த­தா­கக் கூறும் இவர், முடி­வில் தமக்­குத் தாமே அதனை வடி­வ­மைக்­கத் தொடங்­கி­னார்.

இன்று இவ­ரால் பல தாய்­மார்­கள் பல­ன­டை­கி­றார்­கள். சிங்­கப்­பூ­ர், மலே­சியா, ஹாங்­காங், புருணை போன்ற நாடு­களில் இவ­ரது மார்க்­கச்சை வியா­பா­ரம் ஆகிறது. ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் தொடங்­கிய இந்த வர்த்­த­கம் ஆண்­டுக்கு 30% வளர்ச்­சி­ பெற்று வரு­கிறது.