மேலும் நான்கு பேட்டைகளில் காப்பிக்கடை கழிவறைத் தூய்மை மேம்பாட்டுத் திட்டம்

மேலும் நான்கு பேட்டைகளில் காப்பிக்கடை கழிவறைத் தூய்மை மேம்பாட்டுத் திட்டம்

1 mins read
c72c7f74-7167-441f-ae58-d2aaaca16585
-

காப்­பிக்­க­டை­களில் உள்ள கழி­

வ­றை­க­ளின் தூய்மையை மேம்­ப­டுத்த ஜூரோங்­கில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புதிய நட­வ­டிக்கை, இப்­போது மேலும் நான்கு வட்­டா­ரங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்டுள்­ளது. பொங்­கோல், தெம்­ப­னிஸ், பொத்­தோங் பாசிர், செம்­ப­வாங் ஆகி­யன அவை. ஆகஸ்ட் முதல் அக்டோ­பர் வரை இந்­தப் பகு­தி­களில் தூய்மை மேம்பாட்டுத் திட்டம் செயல்படும்.

ஜூரோங் முன்­னோ­டித் திட்­டம் இவ்­வாண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மூன்று காப்­பிக் கடை­களில் நடப்­பில் இருந்­தது. இந்தக் காலகட்டத்தில் பத்­துக்­கும் மேற்­பட்ட சமூ­கத் தொண்­

டூ­ழி­யர்­கள் காப்­பிக் கடை­க­ளுக்­குச் சென்று சோதித்­த­னர்.

அசுத்­த­மான கழி­வ­றை­கள் பற்றி காப்­பிக் கடை நடத்­து­வோ­ரி­டம் தெரி­வித்­த­னர்.

கழி­வ­றை­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது பின்­பற்­றப்­பட வேண்­டிய ஒழுக்க நெறி­மு­றை­களை காப்­பிக் கடை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அவர்­கள் நினை­வூட்­டி­னர்.

கழி­வறைத் தூய்மை மேம்பாட்டுத் திட்டம் 'குடி­யி­ருப்பு வட்­டார கழி­வறை சமூ­கக் குழு' என்னும் அமைப்பின் ஏற்­பாட்­டில் தொடங்­கப்­பட்­டது.

ஆண்­டு­தோ­றும் ஒரு மாத காலம் நடத்­தப்­படும் 'சிங்­கப்­பூரை சுத்­த­மாக வைத்­தி­ருப்­போம்' என்­னும் பிர­சார இயக்­கம் இவ்வாண்டு ஏப்­ர­லில் நடை­பெற்­ற­போது புதிய திட்டம் குறித்த அறி­விப்பை பொது சுகா­தார மன்­றம் வெளியிட்டது.