அறிவார்ந்த தேசத்திற்கு விரிவான மின்னிலக்க தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம்: டெஸ்மண்ட்

அறிவார்ந்த தேசத்திற்கு விரிவான மின்னிலக்க தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம்: டெஸ்மண்ட்

2 mins read
0d3b948f-b2c8-44d8-ae3e-ff7b0f904d2c
-

சிங்­கப்­பூரை அறி­வார்ந்த தேச­மாக மாற்ற மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பப் பயன்­பாட்டை விரி­வாக்­கு­வது அவ­சி­யம் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற உலக நகர மேயர்­கள் மாநாட்­டில் கலந்­து­கொண்டு அவர் பேசி­னார்.

"இன்­றைய மாநாட்­டில் உல­கம் முழு­வ­தும் இருந்து 60க்கும் மேற்­பட்ட நகர மேயர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர். கொவிட்-19க்குப் பிந்­திய நட­

வ­டிக்­கை­களை நம்­மில் பலர் எடுத்து ­வந்­தா­லும் புதிய துணைக் கிருமி­ கள் உரு­வா­கும் அபா­யத்தை மனத்­தில் கொண்டு எப்­போ­தும் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும்.

"இன்­றைய விவா­தம் மின்­னி­லக்­கம், கரி­மக்­கு­றைப்பு ஆகிய தலைப்­பி­லா­னது. நாம் மின்­னி­லக்­கத்தை விரைந்து தழு­வ­வேண்­டிய அவ­சி­யத்தைக் கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

"சிங்­கப்­பூரை அறி­வார்ந்த தேச­மாக மாற்ற கடி­ன­மாக உழைத்து வரு­கி­றோம். மின்­னி­லக்கச் சமூ­கம், மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல், மின்­னி­லக்க அர­சாங்­கம் என்­னும் முக்­கி­ய­மான மூன்று தூண்­கள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன.

"இதன் நோக்­கம், நமது குடி­மக்­கள், வர்த்­த­கம், அர­சாங்க அமைப்­பு­கள் ஆகிய அனைத்­தும் மின்­னி­லக்­கத் திறன்­களை அதி­கம் பெற­வேண்­டும் என்­ப­தும் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத்­தின் அத்­தனை அம்­சங்­க­ளை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தும் ஆகும். இவ்­வாறு செய்­வ­தால் உற்­பத்­தித்­

தி­றனை அதி­கப்­ப­டுத்­தி மக்­க­ளின் வாழ்க்­கையை முன்­னேற்­ற­லாம்.

"கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்க சிங்­கப்­பூர் பாடு­பட்டு வரு­கிறது. குறிப்­பாக, இந்த நூற்­றாண்­டின் நடுப்­ப­கு­திக்­குள் கரி­மம் இல்­லாத நிலையை உரு­வாக்க நாடு கடப்­பாடு கொண்டு உள்­ளது. கரி­மக் குறைப்­பில் எல்­லா­ரும் தங்­க­ளது பங்கை ஆற்ற மக்­களை மைய­மா­கக் கொண்ட அணு­கு­முறை அவ­சி­யப்­ப­டு­கிறது.

"ஆக, மின்­னி­லக்­க­ம­யம், கரி­மக்­கு­றைப்பு மட்­டு­மல்­லாது மற்ற எல்லா வகை­யா­ன­வற்­றுக்­கும் தீர்­வு­காண்­

ப­தில் நாம் வெற்­றி­ய­டைய இய­லும். அதற்கு நமது மக்­களை ஒருங்­கி­ணைத்து, பொது­வான இலக்கை நோக்கி அவர்­க­ளைப் பணி­யாற்­றச் செய்யவேண்­டும்," என்­றார் திரு லீ.