சிங்கப்பூர் கடவுச்சீட்டைத் தயாரிப்பதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கடவுச்சீட்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அலுவலகத் திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் கடவுச்சீட்டு பெற தகுதியுடையவரா என்பதைத் தீர்மா னிக்கும் அதிகாரிகள் அவருக்கான கடவுச்சீட்டின் காலாவதிக் காலத்தை நிர்ணயிப்பர்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் காலாவதிக் காலம் 10 ஆண்டுக்கு அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், 16 வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கான கடவுச்சீட்டின் காலாவதிக் காலம் ஐந்து ஆண்டு என்று நீடிக்கிறது.
அவர்களின் முகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.
அடுத்தகட்டமாக, விண்ணப்பதாரரின் பெயரும் அவரது பிறந்த தேதியும் எளிதில் சேதப்படுத்த இயலாத வகையில் கடவுச்சீட்டில் பொறிக்கப்படும்.
இப்படித் தயாராகும் கடவுச்சீட்டின் எழுத்துகள் கோணலாக இல்லாமல் உள்ளனவா, வேறு எதுவும் குறைகள் உள்ளனவா என்பதை அதிகாரிகள் சோதிப்பார்கள்.
தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 6,500 கடவுச்சீட்டுகளை அவர்கள் இவ்வாறு பரிசோதித்து வருகிறார்கள்.
இதன் பிறகு, விண்ணப்பதாரரின் முக அடையாளம், விரல் ரேகை ஆகியன தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய அங்க அடையாளச் சில்லு கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது இயந்தி ரத்திற்குள் புகுத்திச் சோதிக்கப்படும்.
கடவுச்சீட்டை வழங்கும் முன்னர் அதனை எந்தப் பகுதியில், எந்த நேரத்தில் பெற விண்ணப்பதாரர் பதிவு செய்துள்ளார் என்பதைப் பொறுத்து கடவுச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

