இயற்கை ஆர்வலர், மருத்துவர், அழகு ராணி

இயற்கை ஆர்வலர், மருத்துவர், அழகு ராணி

4 mins read
5c668929-d700-43b3-845f-8df01bc98e68
-
multi-img1 of 2

அருணா கந்தசாமி

மாதர் சுகா­தா­ரம், இயற்­கைப் பாது­காப்பு ஆகி­ய­வற்றை மருத்­து­வ­ரான நிஷா தயானந்­தன், 29, தன் இரு கண்­க­ளா­கக் கரு­து­கி­றார். 2020ஆம் ஆண்­டில் 'மிஸ் எர்த் மலே­சியா' பட்­டத்தை வென்ற இவர், நெகி­ழிக் கழி­வற்ற மாதவிடாய்க்கால அணை­யா­டை­களை (sanitary napkins) உரு­வாக்­கி­ய­து­டன் அதை மேடை­யில் 'இகோ­பேட்' (ecopad) என்ற பெய­ரில் உல­கிற்கு அறி­மு­க­மும் செய்து வைத்­தார்.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக அறுவை சிகிச்சை மருத்­துவ நிபு­ண­ரா­கப் பணி­புரி­யும் நிஷா, பள்­ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே அழகு ராணிப் போட்­டி­களில் அதிக நாட்­ட­மு­டை­ய­வர். சிரம்­பா­னில் பிறந்த இவ­ருக்­குப் போட்­டி­களும் புதி­தல்ல, கிரீ­டங்­களும் புதி­தல்ல. 2019ஆம் ஆண்டு 'மிஸ் வேர்ல்ட் மலே­சியா' போட்­டி­யில் சிறப்பு விருது வென்­றார்.

'மருத்துவராக பாதுகாப்பதே என் கடமை'

"இயற்­கையை அதி­கம் நேசிப்­ப­வள் நான். ஆனால் நெகி­ழி­யின் ஆதிக்­கத்­தால் அண்­மைய கால­மாக மாசு­பாடு மோச­மா­கி­யுள்­ளது. பெண்­கள் பொது­வா­கப் பயன்­ப­டுத்­தும் அணை­யா­டை­யில் 90% நெகி­ழி­யும் 10% செயற்கை வாசனை திர­வி­யங்­கள், டையாக்­ஸின் போன்ற புற்­று­நோயை உண்­டாக்­கும் இர­சா­ய­னங்­களும் இருக்­கின்­றன. ஒரு மருத்­து­வ­ராக மற்­ற­வர் நல­னைப் பாது­காப்­பது என் கடமை. அத­னால்­தான் நெகிழிப் பயன்­பாட்­டைக் குறைக்க நான் நெகி­ழிக் கழி­வில்லா அணை­யா­டை­க­ளைக் கண்­டு­பி­டித்­தேன்," என்று விளக்­கி­னார்.

சாதா­ரண மாதவிடாய்க்கால அணை­யாடை­கள் மண்­ணில் முழு­மை­யா­கச் சிதை­வ­தற்கு 800 முதல் 1000 ஆண்­டு­க­ளா­கும். ஆனால் கரி­மப் பஞ்சு, மரக்­கூ­ழால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள 'இகோ­பேட்', 216 மணி நேரத்­தி­லேயே சிதைந்து இயற்­கைப் பொருள்க­ளாக மாறி­வி­டும்.

விழிப்புணர்வு வேண்டும், சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும்

ஒவ்­வொரு பொட்­ட­லத்­தி­லும் அணை­யாடை­க­ளு­டன் தக­வல் ஏடு­களும் இருக்­கும். கர்ப்­பப்­பை­வாய் புற்­று­நோய், மார்­ப­கப் புற்று­நோய்க்­கான அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றி­யும் தக­வல்­கள், உத­விக்கு அணு­கக்­கூ­டிய அவ­ச­ரத் தொடர்பு எண்­கள் போன்ற விவ­ரங்­கள் அச்­சி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

பொட்­ட­லத்­தின் மீதுள்ள சாயம் முதல் ஒட்டு பசை வரை அனைத்­தும் இயற்­கை­யைப் பாது­காக்­கும் வகை­யில் உணவு அடிப்­ப­டை­யி­லான பொருள்க­ளால் (food based) உரு­வாக்­கப்­பட்­டவை.

முழு­நேர வேலை, அழ­கிப் போட்­டி­கள், பட்டப்­ப­டிப்பு இவற்­று­டன் இந்த அர்த்­த­முள்ள தொழி­லைத் தன் இரட்டை சகோ­த­ர­ரு­டன் இணைந்து செயல்படுத்தி வரு­கி­றார் நிஷா. சமூ­கத்­திற்­குத் தன் பங்கை ஆற்­ற­வேண்­டும் எனும் ஆர்­வத்­தால், குறைந்த விலை­யில் தன் மாதவிடாய்க்கால அணையாடைகளை இரண்டு ஆண்­டு­க­ளாக மலே­சி­யா­வில் விற்­பனை செய்து வரு­கி­றார். விற்­ப­னை­யா­கும் ஒவ்­வொரு பொட்­ட­லத்­திற்­கும் வச­தி­கு­றைந்த மக்­க­ளுக்கு ஒரு வெள்ளி நன்­கொ­டை­யா­கப் போய்ச் சேரும்.

வருத்தும் பிரச்சினைக்குத்

தீர்வு காண முடிவு

2011 முதல் 2016 வரை­யி­லான கால­கட்­டத்­தில் கோத்தா சம­ர­கா­னில் உள்ள மலே­சியாவின் சர­வாக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வம் பயில்­வ­தற்­காக சென்ற நிஷா, அந்த மாநி­லத்­தி­லி­ருந்த பழங்­குடி மக்­க­ளி­டையே சுகா­தா­ரம் மற்­றும் ஆரோக்­கி­யம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தச் சென்­றி­ருந்­தார். அங்கு தான் கண்ட காட்­சி­கள், தன்னை மிக­வும் பாதித்­த­தா­கக் கூறுகிறார் நிஷா.

"மாத­வி­டாய்க் காலத்­தில் பெண்­கள் சுகா­தா­ரத்­தைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­னால் நோய்த்­தொற்று, புற்­று­நோய் என உயி­ருக்கே ஆபத்து நேரலாம். அங்­கி­ருந்த பெண்­கள் அழுக்­குத் துணி, தேங்­காய் நார் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­னர். இவர்­க­ளைப் போல் மலே­சி­யா­வில் எத்­த­னையோ வச­தி­கு­றைந்­த­வர்­கள் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு ஏதா­வது ஒரு வகை­யில் உத­வ­ வேண்­டும் என்று அன்று நான் முடி­வெ­டுத்­தேன். கடு­மை­யான ஆராய்ச்­சிக்­குப் பின்­னர் 2020ல் என் அணை­யா­டை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­னேன்," என்கிறார் இவர்.

பல்வேறு ஆதரவுத் திட்டங்களில் ஈடுபாடு

மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் நோக்­கில் 'கம்­யூ­னிட்டி ஆஃப் ஹெல்த்' என்ற உத­விக் குழு­வை­யும் இவர் நிர்­வ­கித்து வரு­கி­றார். கொவிட்-19 நெருக்­கடி காலத்­தின்­போது வச­தி­கு­றைந்த மக்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சிய பொருள்­கள், குறிப்­பாக தமது அணை­யா­டை­களை நன்­கொ­டை­யாக வழங்­கு­வது, பள்­ளி­களில் டெங்கி காய்ச்­சலைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு முகா­மிற்கு ஏற்­பாடு செய்­வது போன்ற பல வழி­களில் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­னார். மலே­சி­யா­வில் மட்­டு­மல்­லா­மல் இந்­தோ­னீ­சியா, தென் ஆப்­பி­ரிக்கா என்று கண்­டங்­கள் தாண்­டி­யும் இவ­ரது சமூ­கச் சேவை தொடர்­கிறது.

மலே­சி­யா­வைச் சேர்ந்த 'பெக்கா' என்ற அரசு சார்­பற்ற அமைப்­பு­டன் இணைந்து இயற்­கை­யைப் பாது­காப்­ப­தற்கு 20,000க்கு மேற்­பட்ட மரங்­கள் நடு­வ­தற்கு உதவி­ உள்­ளார்.

அவ­ரு­டைய பங்­க­ளிப்­புக்கு அமெ­ரிக்க மருந்­தக வர­லாற்று ஆய்­வுக் கழ­கம் விருது வழங்­கிச் சிறப்­பித்­துள்­ளது.

ஒருவரது வெற்றிக்குக் குடும்பப் பின்னணி முக்கியமல்ல

இளம் வய­தி­லேயே இத்­தனை லட்­சி­யங்­க­ளை­யும் சாத­னை­க­ளை­யும் நிகழ்த்­தி­யுள்ள நிஷா, தன் அம்­மா­தான் தனக்கு முன்­மா­திரி என்­கி­றார். இல்­லத்­த­ர­சி­யாக, நான்கு பிள்­ளை­க­ளை­யும் வளர்த்­த­து­டன் அண்­மை­யில் கோலா­லம்­பூ­ரில் முதி­யோர் இல்­லம் மற்­றும் விலங்­கு­களுக்­கான காப்­ப­கம் ஒன்­றை­யும் தன் அம்மா நிர்­வ­கிப்­ப­தாக நிஷா பகிர்ந்­து­கொண்­டார். முது­மைக் காலத்­தி­லும் மற்­ற­வர்­க­ளைப் பரா­ம­ரிக்­க­வேண்­டும் என்று தன் அம்­மா­வி­டம் காணப்­படும் முனைப்பு, தனக்கு ஊக்­கு­விப்­பாக இருந்­த­தென நிஷா குறிப்­பிட்­டார்.

"நான் ஓர் எளி­மை­யான குடும்­பத்­தைச் சேர்ந்­த­வள். என் அப்பா ஒரு டாக்சி ஓட்­டு­நர். அம்மா இல்­லத்­த­ரசி. எந்­தக் குடும்­பப் பின்­ன­ணி­யி­லிருந்து வந்­தா­லும், நம் குறிக்­கோளை நோக்­கிக் கடி­வா­ள­மிட்ட குதி­ரை­யைப் போல ஓடி­னால் வெற்றி நிச்­ச­யம்," என இளை­யர்­க­ளுக்கு நிஷா அறி­வு­றுத்த விரும்பு­கி­றார். இவ­ரு­டைய அணை­யா­டை­களை இன்­னும் ஓராண்டில் மற்ற நாடு­களி­லும் விற்­பனை செய்­யும் தன் எதிர்­கா­லத் திட்­டங்­க­ள் பற்றியும் இவர் கூறுகிறார். சிங்­கப்­பூ­ரில் இவ­ரது அணை­யா­டை­களை விற்­பனை செய்­வ­தற்கு லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கத்­துடன் இணைந்து முயற்சி மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் கூறு­கி­றார் இந்த இள­நங்கை.