தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புருணை பட்டத்து இளவரசர் சிங்கப்பூர் வருகை

1 mins read
dc5355db-275e-4c0d-99e5-f3d01c05f604
-

புரு­ணை­யின் பட்­டத்து இள­வ­ர­சர் அல் முஹ்டாடி பில்லா சிங்­கப்­பூ­ருக்கு இவ்­வா­ரம் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்­கி­றார். எட்­டா­வது சிங்­கப்­பூர்-புருணை இளம் தலை­வர்­கள் திட்­டத்­துக்கு அவர் தலை­மை­யின்­கீழ் புருணை பிர­மு­கர்­கள் வரு­வ­தாக வெளி­யு­றவு அமைச்சு நேற்று கூறி­யது.

இந்­தத் திட்­டம் 2013ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இரு­நா­டு­க­ளைச் சேர்ந்த இளம் தலை­வர்­கள் சந்­தித்து நல்­லு­றவை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள இது முக்­கிய தள­மாக அமை­கிறது.

இத்­திட்­டத்தை சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் மாறி மாறி ஏற்று நடத்­து­கின்­றன.

மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹிய­னின் அழைப்பை ஏற்று புரு­ணை­பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் மூத்த அமைச்­ச­ரு­மான பட்­டத்­து இள­வ­ர­சர் பில்லா இன்று முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை சிங்­கப்­பூ­ரில் இருப்­பார்.

பட்­டத்­து இள­வ­ர­ச­ரு­டன் அவ­ரது மனை­வி­யான இள­வ­ரசி சாரா­வும் அவர்­க­ளது மூன்று பிள்­ளை­களும் சிங்­கப்­பூ­ருக்கு வரு­கின்­ற­னர்.

பட்­டத்­து இள­வ­ர­ச­ரின் வருகை சிங்­கப்­பூ­ருக்­கும் புரு­ணைக்­கும் இடை­யி­லான நெருங்­கிய நல்­லு­றவை மறு­உ­றுதி செய்­கிறது என்று அமைச்சு கூறி­யது.

இனி வரும் காலங்­களில் சிங்­கப்­பூ­ருக்­கும் புரு­ணைக்­கும் இடை­யி­லான நல்­லு­றவை வலுப்­ப­டுத்­து­வது குறித்து சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

பட்­டத்து இள­வ­ர­சர் விக்­டோ­ரியா பள்ளி, விக்­டோ­ரியா அரங்கம், அவர் தெம்­ப­னிஸ் ஹப், ஆர்­எஸ்­எஸ் சிங்­கப்­பூரா- சாங்கி கடற்­ப­டைத் தளம் ஆகி­ய­வற்­றுக்கு வருகை புரி­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.