தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுக்கு 33 டன் காய்கறிகளை சாகுபடி செய்யும் புதிய பண்ணை

2 mins read
3d53ec59-94e2-4c8c-a40a-1707f00350f0
'குரோகிரேஸ்' பண்ணையில் காய்கறி சாகுபடி செய்யப்படும் முறை குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோரிடம் விளக்கப்படுகிறது. படம்: அர்பன் ஃபார்மிங் பார்ட்னர்ஸ் சிங்கப்பூர் -

கச்­சி­த­மான இடத்­தில் ஆண்­டு­தோறும் 33 டன் பச்சை பசேலான காய்­கறி­களை சாகு­படி செய்ய முடிகிற புதிய நகர்ப்­புற பண்ணை ஒன்று தொடங்கி வைக்­கப்­பட்­டு உள்­ளது.

'குரோ­கி­ரேஸ்' என்று அழைக்­கப்­படும் இந்­தப் பண்ணை 650 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வைக் கொண்­டுள்­ளது. இது, ஒன்­றரை கூடைப்­பந்து அரங்­கின் அள­வுக்­குச் சமம். இந்­தப் பண்­ணை­யின் நான்கு மாடி­களில் காய்­க­றி­கள் பயிர் செய்யப்­படு­கின்­றன.

வழக்­க­மான உட்­புற பண்­ணை­களை­விட இது நான்கு மடங்கு அதிக உற்­பத்­தித்­தி­ற­னைக் கொண்டுள்­ளது. ஒரு சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் 70 கிலோ­கி­ராம் காய்­கறி­களை சாகு­படி செய்­யும் ஆற்­றலை இந்­தப் பண்ணை கொண்­டு உள்­ளது.

பண்­ணை­யின் தொடக்க நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்­டார் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர்.

சிங்­கப்­பூர் உணவு அமைப்­பின் $50 மில்­லி­யன் மதிக்­கத்­தக்க வேளாண் உற்­பத்­தித்­தி­றன் நிதி­யின் மூலம் பலன் அடைந்­துள்ள பண்­ணை­களில் 'குரோ­கி­ரேஸ்' பண்­ணை­யும் ஒன்று என்று அவர் குறிப்­பிட்­டார்.

விவ­சா­யி­கள் காய்­கறி சாகு­படியை அதி­க­ரிக்க உதவ இந்த நிதி 2014ல் தொடங்­கப்­பட்­டது. 2030க்குள் உள்­ளூர் ஊட்­டச்­சத்­து­ணவு தேவை­யில் 30 விழுக்­காடு அள­வைப் பூர்த்தி செய்­ய­வும் இந்த நிதி உத­வு­கிறது.

உயர் தொழில்­நுட்­பச் சாத­னங்­கள், வேளாண் முறை­யைக் கடைப்­பி­டிக்க 132 நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த நிதி ஆத­ர­வ­ளித்து உள்­ள­தாக டாக்­டர் கோர் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்டு வேளாண் உற்­பத்­தித்­தி­றன் நிதிக்­குப் பதி­லாக $60 மில்­லி­யன் மதிப்­புள்ள புதிய வேளாண் உண­வுக் குழும உரு­மாற்ற நிதி தொடங்­கப்­பட்­டது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இது மேலும் அதிக நிதியை வழங்­கும். இதன் மூலம் கூடு­த­ல் உணவு வகை­கள் உற்­பத்­தித்­தி­றன் வாய்ந்த, நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய தொழில்­நுட்­பங்­கள், மேம்­பட்ட வேளாண் முறை­ போன்றவற்றைக் கடைப்­பிடிக்க இந்த நிதி உத­வும்.

இது­வரை இந்த நிதிக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள $3.8 மில்­லி­யன், 13 திட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­படும் என்­றார் டாக்­டர் கோர்.