பொது விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கலாம்

பொது விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கலாம்

1 mins read
7567e798-eeb8-4166-a493-a5e93fac53e5
-

எதிர்வரும் தேசிய தின பொது விடுமுறையை முன்னிட்டு மலேசியா செல்லத் திட்டமிடுவோர், கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கூறியுள்ளது.

கடந்த வாரயிறுதியில் உச்ச அளவாக ஒரே நாளில் 290,00 பேர் தரைவழி மலேசியாவுக்குச் சென்றனர்.

சிங்கப்பூரிலிருந்து கிளம்புவதற்கு முன் போக்குவரத்து நிலவரம் குறித்த அண்மை தகவல்கள் பெற்றுகொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

சோதனைச்சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைக்குக் கூடுதல் நேரத்தைப் பயணிகள் கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நேரத்தைத் தவிர்க்கவும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது.