நில சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

நில சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

1 mins read
7cacfb34-88c4-4308-8180-d5fa5e695d32
-

தேசிய தின விடு­மு­றைக் காலத்தை முன்­னிட்டு உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­களில் தாம­த­மும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த வார இறு­தி­யில் மட்­டும் நாளுக்கு 290,000க்கும் மேற்­பட்­டோர் சோத­னைச்­சா­வ­டி­கள்­வழி கடந்­த­னர்.

உட்­லண்ட்ஸ் பாலம் வழி­யா­க­வும் சோத­னைச் சாவ­டி­க­ளின் வழி­யா­க­வும் போக்­கு­வ­ரத்து நெரி­சல் அதி­க­ரித்து வரு­வ­தால், பய­ணி­கள் நெரி­ச­லில் சிக்­கு­வ­தைத் தவிர்க்க, தங்­க­ளது பய­ணத் திட்­டங்­களில் மாற்­றம் செய்­யு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

கொவிட்-19 நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய ஆண்­டான 2019ல், தேசிய தின நீண்ட வார இறு­தி­யின்­போது போக்­கு­வ­ரத்து நெரி­சல் உச்­சத்­தைத் தொட்­டது. நிலச் சோத­னைச் சாவ­டி­க­ளைப் பயன்­ப­டுத்­திய பய­ணி­கள், நான்கு மணி­நே­ரம் வரை காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் (ஐசிஏ) குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன், நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் 'ஒன் மோட்­டோ­ரிங்' இணை­யத்­த­ளத்­தின் வழி­யாக நிலச் சோத­னைச் சாவ­டி­க­ளின் போக்­கு­வ­ரத்­தைக் கண்­கா­ணிக்­கு­மாறு வாக­ன­மோட்­டி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.