விமானப் பயணம் ரத்தாவதை தவிர்ப்பதில் எஸ்ஐஏ முதலிடம்

விமானப் பயணம் ரத்தாவதை தவிர்ப்பதில் எஸ்ஐஏ முதலிடம்

1 mins read
35ce773e-53cc-4126-b7b1-eb2203e37830
-

உல­கெங்­கும் இயங்­கி­வ­ரும் 19 விமான நிறு­வ­னங்­களில், விமா­னப் பய­ணம் ரத்து செய்­யப்­ப­டு­வ­தைத் தவிர்ப்­ப­தில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) முத­லி­டம் பெற்­றுள்­ளது. இது­வரை அதன் திட்­ட­மிட்ட சேவை­களில் 0.1% மட்­டுமே எஸ்­ஐஏ ரத்து செய்­த­தாக 'சிரி­யம்' பகுப்­பாய்வு நிறு­வ­னம் வெளி­யிட்ட தர­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

பட்­டி­ய­லின் இறுதி இடத்தை 'வெர்­ஜின் ஆஸ்­தி­ரே­லியா' பிடித்­தி­ருந்­தது. மூன்று மாதங்­களில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் சுமார் 2,200 விமா­னப் பய­ணங்­களை அது ரத்து செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பத்­தா­யி­ரக்­க­ணக்­கில் விமா­னி­கள், விமா­னச் சிப்­பந்­தி­கள், பய­ணப்­பெட்டி பணி­யா­ளர்­கள், பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­கள் போன்­றோ­ரைக் கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் பணி­நீக்­கம் செய்­ததை அடுத்து தற்­போது அதி­க­ரிக்­கும் விமா­னப் பய­ணங்­க­ளைச் சமா­ளிக்க விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை திண­று­கிறது.

பட்­டி­ய­லில் குவாண்­டஸ் ஏர்­வேஸ், ஏர் நியூ­சி­லாந்து போன்ற நிறு­வனங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.