மியன்மாரில் உள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திட்டங்களில் முன்னேற்றம் காணப்படாதது குறித்து ஏமாற்றம் அடைந்ததாக ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் மியன்மாரின் அண்மை நிலவரம் குறித்து அமைச்சர்கள் விரிவாகக் கலந்துபேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற மாதம் அங்கு எதிர்த்தரப்பு ஆர்வலர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்தும் அமைச்சர்கள் கலந்துரையாடினர்.
ஐந்து அம்ச அமைதித் திட்டத்தை முழுமையாகவும் குறித்த நேரத்திலும் மியன்மார் அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியது, அதன் கடப்பாடு இல்லாத நிலையைக் காட்டுவதாக அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
முதல்முறையாக ஆசியான் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் இவ்வாறு கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆசியானில் அங்கம் வகிக்கும் நாட்டின் உள்நாட்டு நிலவரம் பற்றி அமைச்சர்கள் கூட்டறிக்கையில் குறிப்பிடுவது இது இரண்டாவது முறை.
கூடுதல் செய்தி: மோனலிசா

