இளையர்களை இணைத்த 'சிண்டா ஃபுட்சால் சவால் 2022'

இளையர்களை இணைத்த 'சிண்டா ஃபுட்சால் சவால் 2022'

3 mins read
c7e508af-884d-4251-b3d8-933d9b798bfd
(இடமிருந்து) விறுவிறுப்பாக ஆடிய ஆண்கள் அணியினர், வெற்றிக் கிண்ணத்துடன் 25 வயதுக்குக் குறைந்த ஆண்கள் அணியினர், திறமையாக ஆடிய பெண்கள் அணியினர். படங்கள்: சிண்டா -
multi-img1 of 3

பொன்­மணி உத­ய­கு­மார்

ஈராண்டுகால இடை­வெ­ளிக்­குப்­பின் 'சிண்டா ஃபுட்சால் சவால் 2022', கடந்த மாதம் 29ஆம் தேதி­அன்று ஈசூன் ஃபுட்சால் அரங்­கத்­தில் சிண்டா காற்­பந்து சங்­க ஏற்பாட்டில் நடைபெற்றது. 13 முதல் 25 வயது வரை­யி­லான இளை­யர்­கள் போட்­டி­யிட்­ட­னர். கலந்­து­கொண்ட அணி­கள் $2,500 மதிப்­பி­லான பரி­சு­களை வென்­ற­னர்.

இப்­போட்­டி­க­ளின் மூலம் மீள்­தி­றன், ஒழுக்­கம், பொறுப்­பேற்­றல் பண்­பு­களை இளை­யர்­க­ளி­டத்­தில் வளர்ப்­ப­தும் அவர்­கள் மேலும் பல சாத­னை­கள் புரிவ­தற்கு வழி­வ­குப்­ப­துமே சிண்டா காற்­பந்து சங்­கத்­தின் நோக்­க­மா­கும்.

"சங்­கம் ஏற்­பாடு செய்­யும் காற்­பந்­துப் பயிற்­சி­களில் கற்­பிக்­கப்­படும் திறன்­களை இளை­யர்­கள் தங்­கள் கல்­வி­யி­லும் வாழ்க்­கை­யி­லும் பயன்­ப­டுத்­த­லாம்," என்று சிண்­டா­வின் தலை­மைச் செயல்­பாட்டு அதி­காரி திரு ரவிந்­தி­ரன் நாக­லிங்­கம் நம்­பு­கி­றார். இளை­யர்­களை இணைப்­ப­தற்­கும் ஈர்ப்­ப­தற்­கும் விளை­யாட்டு ஒரு சிறந்த வழி என்­றும் இவர் நம்புகிறார்.

போதைப் புழக்­கத்­திற்கு எதி­ரான தேசிய மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கும் இவர், போதைப்­பொ­ருள் பயன்­பாடு சமூ­கத்­தைச் சீர­ழிக்­கக்­கூ­டி­யது என்று கூறுகிறார். போதைப்­பொ­ருள் புழக்­கம் வேண்­டா­மென இளை­யர்­க­ளி­டையே அறி­வு­றுத்­து­வ­தைக் காட்­டி­லும் அவர்­களே சுய­மாக முடி­வெ­டுத்து அதைத் தவிர்ப்­ப­தற்­கான வழி­களைக் கண்­ட­றி­வது சிறந்­தது என்கிறார் இவர்.

இளை­யர்­கள் மத்­தி­யில் ஒரு பிரச்­சி­னை­யாக போதைப்­பொ­ருள் உரு­வெ­டுப்­பதை எதிர்­கொள்ள, மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வோடு சிண்டா அமைப்பு சேர்ந்து போதைப்­பொ­ருள் விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளது. இந்தப் பிர­சா­ரத்­தின் ஓர் அங்­க­மாக சிண்டா காற்­பந்து சங்­கத்­தைச் சேர்ந்த இளை­யர்­கள், போதை ஒழிப்­புத் தூதர்­க­ளாக செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் போதை ஒழிப்­புப் பயி­ல­ரங்­கில் பங்­கேற்ற 18 வயது கார்த்­திகா, போதைப்­பொ­ரு­ளின் தீய விளை­வு­கள் பற்றி அறிந்­து­கொண்டு அதை சக விளை­யாட்­டா­ளர்­க­ளு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் பகிர்ந்­து­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

சிண்டா ஃபுட்சால் சவா­லில் பெண்­கள் அணிக்­கும் போட்­டி­கள் நடத்­தப்­ப­டு­வதை அறிந்­து­கொண்ட இவர், தன் அணி­யு­டன் கலந்து கொண்­டார். காற்­பந்­தில் ஆர்­வம் இல்­லை­யென்­றா­லும் இம்­மா­தி­ரி­யான போட்­டி­க­ளின்­வழி கிடைக்­கும் அனு­ப­வங்­க­ளுக்­காக அவற்­றில் பங்­கேற்­கு­மாறு கார்த்­திகா இளை­யர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றார்.

நான்கு வரு­டங்­க­ளுக்கு முன் சிண்டா காற்­பந்து சங்­கத்­தில் சேர்ந்த 20 வயது வர்­ஷினி, முதன்­மு­றை­யாக இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்­டார்.

வாரந்­தோ­றும் இரண்டு முறை நடை­பெ­றும் காற்­பந்து பயிற்­சி­களில் ஈடு­படும் இவ­ருக்கு தன்­னம்­பிக்கை வளர்ந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டார். சிறு வய­தி­லி­ருந்தே தன் அண்­ண­னு­டன் காற்­பந்து விளை­யா­டி­ய­தன் மூலம் இவ­ருக்கு இவ்­வி­ளை­யாட்­டில் ஆர்­வம் கூடி­யது. இந்த ஆர்­வத்தை வளர்த்­துக்­கொள்ள சிண்டா காற்­பந்து சங்­கம் நடத்­தும் பயிற்சி வகுப்­பு­கள் ஒரு நல்ல வாய்ப்­பாக அமைந்­த­தெ­னக் கூறுகிறார்.

சிண்டா காற்­பந்து சங்­கத்­தின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான 19 வயது ப்ர­னீத், ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் விளை­யாட்­டுத்­துறை பயிற்றுவிப்பாளர் தகுதி பெற (Sports Coaching) பயின்று வரு­கி­றார். சங்­கத்­தின் பயிற்­சி­யா­ள­ரி­டம் இருந்து பயிற்­சி­பெ­று­வது மட்­டு­மல்­லா­மல் தன்னை விட இளம் வய­தி­ன­ருக்­குப் பயிற்சி அளித்­தும் வரு­கி­றார். கற்­றுக்­கொள்­வ­தைத் தனது பள்­ளிப் பாடங்­க­ளி­லும் கையாண்டு பய­ன­டைந்து வரு­வ­தாக இவர் பகிர்ந்­து­கொண்­டார். கல்­வியை என்­றும் கைவி­டா­மல் இருப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் இவர் வலியுறுத்துகிறார்.

காற்­பந்துப் பயிற்­சி­கள் தனக்கு ஒழுக்­கத்­தைக் கற்­றுத்­தந்­த­து­டன் உடலை உறு­தி­யாக வைத்­துக்­கொள்­ள­வும் ஆரோக்­கி­ய­மான உணவு­மு­றையை கடைப்­பி­டிக்­க­வும் வழி­காட்­டி­ய­தாக பகிர்ந்­து­கொண்­டார் 19 வயது தேஜா. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் இப்­போட்­டி­யில் பங்­கேற்க முடி­யா­மல் போன நிலை­யில், இந்த ஆண்டு கட்­டுப்­பா­டு­

க­ளின்றி முழு­மை­யான ஒரு குழு­வா­கச் சேர்ந்து விளை­யா­டி­ய­தில் தான் மகிழ்ச்சி கொள்­வ­தா­க­வும் தேஜா கூறுகிறார்.