அமெரிக்க ஆகாயப் படை தலைமை தளபதிக்கு உயரிய ராணுவ விருது

அமெரிக்க ஆகாயப் படை தலைமை தளபதிக்கு உயரிய ராணுவ விருது

1 mins read
234e6d3d-1754-4473-bd10-6f21e48db6b5
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அமெரிக்க ஆகாயப் படை தலைமைத் தளபதி ஜெனரல் சார்ல்ஸ் பிரௌன் ஜூனியரிடம் மெச்சத்தகுந்த சேவைப் பதக்கத்தை (ராணுவம்) வழங்கினார். படம்: தற்காப்பு அமைச்சு -

அமெ­ரிக்க ஆகா­யப் படை தலை­மைத் தள­பதி ஜென­ரல் சார்ல்ஸ் பிரௌன் ஜூனி­ய­ருக்கு பிர­சித்­தி­பெற்ற ராணுவ விருது வழங்­கப்­பட்டுள்­ளது.

அமெ­ரிக்க ஆகா­யப் படைக்கும் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படைக்­கும் இடையே உன்­ன­த­மான, நீண்­ட­கால தற்­காப்பு உறவுகளை மேம்­ப­டுத்­து­வ­தில் முக்­கிய பங்­காற்­றி­ய­தற்­காக இவருக்கு இந்த விருது வழங்­கப்­பட்டுள்­ளது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப், ஜென­ரல் பிரௌ­னுக்கு மெச்­சத்­த­குந்த சேவைப் பதக்­கத்தை (ராணு­வம்) வழங்­கிச் சிறப்­பித்­தார்.

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், தற்­காப்பு அமைச்­சில் நேற்று இவ­ரி­டம் இந்த விருதை வழங்­கி­னார்.

ஜென­ரல் பிரௌ­னின் சிறந்த தலை­மைத்­து­வத்­தின்­கீழ் இரு நாட்டு ஆகா­யப் படை­களும் ஒத்து­ழைப்பை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

நான்கு 'பி' ரக எஃப்-35 போர் விமா­னங்­கள் பெற்றுக்கொள்ளப்­படு­வ­தாக 2019ல் தற்­காப்பு அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது. பயிற்சி, மதிப்­பீட்­டிற்­காக அவை அமெ­ரிக்­கா­வில் பயன்படுத்தப்­படும்.

இரு ஆகா­யப் படை­களும் பயிற்­சி­யின்­போது இணைந்து செயல்­படு­வ­தற்கு ஜென­ரல் பிரௌன் ஆத­ர­வு தெரிவித்­தார்.

நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஆகஸ்ட் 7 முதல் நாளை வரை ஜென­ரல் பிரௌன் சிங்­கப்­பூ­ரில் உள்­ளார்.

புக்­கிட் பாஞ்­சாங் முகா­மில் மரி­யாதை காவல் அணி­யைப் பார்­வை­யிட்ட பிறகு டாக்­டர் இங், தற்­காப்­புப் படைத் தலை­வர் மெல்­வின் ஓங், ஆகா­யப் படைத் தலை­வர் கெல்­வின் கோங் ஆகி­யோரை ஜென­ரல் பிரௌன் தற்­காப்பு அமைச்­சில் சந்­தித்­தார்.

செம்­பா­வாங் ஆகா­யப் படைத் தளத்­திற்கு நேற்று செல்­ல­வி­ருந்த இவர், எச்225எம் ரக ஹெலி­காப்­டரில் ஏறிப் பய­ணம் செய்­ய­ இருந்தார்.