பெட்ரோல், டீசல் விலைகளை மேலும் குறைத்தது எஸ்ஸோ

பெட்ரோல், டீசல் விலைகளை மேலும் குறைத்தது எஸ்ஸோ

1 mins read
d52950dc-812b-423d-976d-c91a248a1d48
-

எஸ்ஸோ எரி­பொ­ருள் விற்­பனை நிறு­வ­னம் டீசல் விலையை 11 காசு குறைத்து உள்­ளது.

அதே­போல தனது மூன்று வகை­யான பெட்­ரோ­லி­லும் ஒன்­பது காசை அந்­நி­று­வ­னம் நேற்று பிற்­ப­க­லில் இருந்து குறைத்­துள்­ளது. இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதத்­திற்­குப் பிறகு இந்த விலை­களே ஆகக் குறைவு.

பெட்­ரோல், டீசல் விலை­க­ளைக் கண்­கா­ணிக்க சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் உரு­வாக்­கிய 'ஃபியுவல் காக்கி' நேற்று இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இரு வாரங்­

க­ளுக்கு முன்­னர் பெட்­ரோல், டீசல் விலை­கள் குறை­யத் தொடங்­கின. அதன் தொடர்ச்­சி­யாக எஸ்­ஸோ­வின் விலைக் குறைப்பு இடம்­பெற்று உள்­ளது.

அந்த நிறு­வ­னத்­தின் 92-ஆக்­டேன் பெட்­ரோல் லிட்­ட­ருக்கு $2.80க்கு விற்­கப்­ப­டு­கிறது. டிபி­எஸ் எஸ்ஸோ அட்­டை­யில் வாங்­கி­னால் அதன் விலை $2.30க்குக் குறைக்­கப்­ப­டு­கிறது.

அதே­போல, 95-ஆக்­டேன் பெட்ரோல் $2.85க்கும் 98-ஆக்­டேன் பெட்ரோல் $3.32க்கும் குறைக்­கப்­பட்டு உள்­ளன.

கச்சா எண்­ணெய் மற்­றும் சுத்தி­ க­ரிக்­கப்­பட்ட பொருள்­க­ளின் விலை­கள் தொடர்ந்து சரி­வ­தால் தனது எண்­ணெய் விலை­களை எஸ்ஸோ குறைத்து உள்­ளது.

இதனை சிங்­கப்­பூ­ரில் உள்ள மற்ற எரி­பொ­ருள் விற்­பனை நிலை­யங்­களும் பின்­பற்­றக்­கூ­டும்.