பொம்மைத் துப்பாக்கி: மாணவருக்கு 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

பொம்மைத் துப்பாக்கி: மாணவருக்கு 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
62b36096-b0ab-4e7d-b705-9f76d5e841fe
-

இணை­யத்­தில் 19 பொம்மை துப்­பாக்­கி­களை வாங்­கிய மாண­

வ­ருக்கு 15 மாத நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது.

டான் யான் ரோங், 20, எனப்­படும் அவர், தன்­வ­சம் வைத்­துக்­கொள்­ளும் அல்­லது மறு­விற்­பனை செய்­யும் நோக்­கத்­து­டன் 'டாவ்­பாவ்' இணைய வர்த்­த­கத்­த­ளத்­தில் பொம்மைத் துப்­பாக்­கி­களை வாங்­கி­ய­தாக நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

ஆயு­தம், வெடி­ம­ருந்­துத் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் தம்மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை கடந்த மாதம் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

மற்­றொரு குற்­றச்­சாட்டு, தண்­டனை விதிப்­பின்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டது.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­பின்­கீழ் வைக்­கப்­பட்டு உள்­ள­தால் டான் தின­மும் இரவு 10 மணி­

யி­லி­ருந்து காலை 6 மணி­வரை தம் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும்.

அத்­து­டன் 15 மாத காலக் கண்­கா­ணிப்­பின்­போது 60 மணி நேரம் அவர் சமூக சேவை­யில் ஈடு­ப­ட­வேண்­டும். டானின் நன்­ன­டத்­தையை உறு­தி­செய்­யும் பொருட்டு அவ­ரது பெற்­றோர் $5,000 பிணைப் பத்­தி­ரம் வழங்­க­வும் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

ஹில்­வியூ அவென்­யூ­வில் உள்ள லாம் சூன் தொழிற்­சா­லைக் கட்­ட­டத்­தில் சோதனை மேற்­கொண்­ட­போது நான்கு தொகுப்பு விளை­யாட்­டுத் துப்­பாக்­கி­க­ளைத் தாங்­கள் கண்­ட­தாக 2020 செப்­டம்­பர் 7ஆம் தேதி குடி­நு­ழை­வு, சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள் காவல்­து­றை­யி­டம் அளித்த புகா­ரில் தெரி­வித்து இருந்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட டானின் வீட்­டி­லி­ருந்து 19 பொம்மைத் துப்­பாக்­கி­கள் கைப்­பற்­றப்­பட்­டதாக அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.