தமது காதலியின் 9 மாத மகனை தனது வேனின் தரையில் தள்ளி கொலை செய்த குற்றத்திற்காக 29 வயது முகம்மது அலிஃப் முகமது யூசோஃக்கு ஆயுள் தண்டனையும் 15 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இஸ் ஃபயாஸ் ஸயானி அஹம்மது எனும் அந்த 9 வயது குழந்தை தமது வலது கையிலிருந்து தவறி விழுந்துவிட்டது எனும் முகம்மது அலிஃபின் கூற்றை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவன் மீதான கொலைக்குற்றம் கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் ஈசூன் ஸ்த்ரீட் 81- இல், நவம்பர் 7ஆம் தேதி, இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12.15 மணிக்கும் இடையே நடந்துள்ளது. குற்றவாளி குழந்தையை அன்று இரவு பார்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.
கண்காணிப்புக் கேமராவில் அலிஃப் தனது வாகனம் நிறுத்தும் இடத்திற்குச் சுமார் 10 மணிக்கு வந்ததாகவும் 11 மணிக்கு குழந்தையைத் தனியாக தனது வாகனத்தில் பூட்டிவிட்டு சென்றதாகவும் காட்டப்பட்டது.
அலிஃபின் வாதத்தில், குழந்தை, வாகனத்தின் கதவை மூடும் போது கை தவறி கீழே விழுந்ததாக கூறப்பட்டது.
பிரேத பரிசோதனையில் குழந்தை மூளையிலிருந்து ரத்தம் கசிந்து இறந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களிடம் கொடுத்த புகாரில் அலிஃப் நடந்த உண்மையான சம்பவத்துக்கும் பொய்க்கும் இடையே ஒரு இடைவெளி காணப்பட்டது.
சென்ற மாதம் அலிஃப் கூறியதலும்ம் மருத்துவ சான்றிதழிலும் முரண்பாடுகள் உள்ளதை நீதிபதி கண்டறிந்தார் .
குற்றவாளி அலிஃப் தன் செயலுக்காகச் சிறிதும் வருத்தப்படாதே நீதிபதி கவனித்தார். குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் குழந்தையைப் புதைத்து விட்டு ஒரு வருடம் கழித்து குழந்தை காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுத்துவிடலாம் என்று அலிஃப் தனது காதலி நாடியாவிடம் கூறியிருந்தான்.