பள்ளிக் கைச்செலவு நிதிக்கு யுஓபியின் $500,000 நன்கொடை

பள்ளிக் கைச்செலவு நிதிக்கு யுஓபியின் $500,000 நன்கொடை

1 mins read
dac61925-12cf-43b3-a87e-38336f8548fb
-

சிறு­வர்­கள் மற்­றும் இளை­யர்­க­ளுக்கு வலு­வான அடித்­த­ளத்தை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­தில் கல்வி இன்­றி­ய­மை­யாத ஒன்று. இதில் தாங்­கள் ஆழ்ந்த நம்­பிக்கை கொண்­டுள்­ள­தா­கக் கூறிய யுஓபி வங்கி, நேற்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்­ளிக் கைச்­செ­லவு நிதி'க்கு $500,000 நன்­கொடை வழங்­கி­யது.

வங்கி முன்­ன­தாக ஜூன் மாதத்­தில் இதே­போல் $500,000ஐ நன்­கொ­டை­யாக வழங்­கி­யி­ருந்­தது.

இவ்­வாறு பள்­ளிக் கைச்­செ­லவு நிதிக்கு ஆத­ரவு தரு­வ­தன் மூலம் பள்­ளிக்­காக தேவைப்­படும் வளங்­க­ளைச் சிறார்­களும் இளை­யர்­களும் பெறு­வர் என்­றும் குறிப்­பாக இச்­ச­வால்­மிக்க கால­கட்­டத்­தில் நிதி பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றும் தாம் நம்­பு­வ­தாக வங்­கி­யின் வர்த்­த­கப் பரி­வர்த்­த­னைப் பிரி­வின் தலை­வர் திரு எரிக் லியன் கூறி­னார்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் தாரா­ள­மாக வழங்கி இருந்த நன்­கொ­டை­கள் மூல­மாக இந்த நிதி திரட்­டப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இது­வரை 200,000க்கும் மேற்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு நிதித் திட்­டத்­தின் மூலம் $90 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது.